Kathir News
Begin typing your search above and press return to search.

பொது சிவில் சட்டமா? ராமர் கோவிலா? மதமாற்ற தடை சட்டமா? அடுத்த அதிரடிக்கு தயாரான மோடி அரசாங்கம்!

பொது சிவில் சட்டமா? ராமர் கோவிலா? மதமாற்ற தடை சட்டமா? அடுத்த அதிரடிக்கு தயாரான மோடி அரசாங்கம்!

பொது சிவில் சட்டமா? ராமர் கோவிலா? மதமாற்ற தடை சட்டமா? அடுத்த அதிரடிக்கு தயாரான மோடி அரசாங்கம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Oct 2019 12:42 PM IST


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த மே மாதம் 2 வது முறையாக பதவி ஏற்றது. பா.ஜ.க கூட்டணி 350-க்கும் மேல் பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற முதல் பாராளுமன்ற கூட்ட தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றபட்டு சாதனை படைத்தது.


இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகின்ற நவம்பர் மாதம் 18- ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கூட்ட தொடரில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது போல் குளிர் கால கூட்ட தொடரிலும் பல அதிரடி மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய மோடி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முஸ்லீம் பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையான முத்தலாக் தடை சட்டம்,இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்.ஐ.ஏ சட்டத்திருத்த மசோதா, காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை 370 சட்டம் நீக்கம் என பல அதிரடி மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றயுள்ளது.அதே வரிசையில் குளிர் கால கூட்ட தொடரில் பல அதிரடி மசோதாக்கள் நிறைவேற வரிசை கட்டி நிற்கின்றன.


அதில் முக்கியமாக பார்க்கப்படுவது அயோத்தி ராமர் கோவில், பொது சிவில் சட்டம், மதமாற்ற தடை சட்டம்,
இந்த மூன்றும் தான் இந்த குளிர் கால கூட்ட தொடரில் நிறைவேறும் என பாஜகவினரிடையே பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.


அதுவும் தேர்தல் அறிக்கையில் கூறியதை வரிசையாக நிறைவேற்றி வருகிறது பா.ஜ.க அரசாங்கம் .பொது சிவில் சட்டமும் அதன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மோடி அரசு வரும் கூட்ட தொடரில் பொது சிவில் சட்டம்தான் கொண்டு வரும் என அதிக அளவில் பேச்சுக்கள் எழுந்துள்ளது. அந்த சட்ட த்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் காணப்படுகிறது. இராமர் கோவிலின் தீர்ப்பு அடுத்த மாதம் வெளி வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ராமர் கோவில் தொடர்பான விவாதங்களும் இக்கூட்ட தொடரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது இருக்கும் சட்டங்கள் ஒவ்வொரு மதத்திற்கும் தனியான சிவில் சட்டங்களாக உள்ளன. இச்சட்டங்கள் அந்ததந்த மதத்தின் அடிப்படையில் திருமணம்,செய்வது விவாகரத்து பெறுவது வாரிசுக்கான சொத்துரிமை, பிள்ளைகளை தத்தெடுப்பது ஜீவனாம்சம் கொடுப்பது உட்பட தனி சட்டங்கள் வரையறுக்கின்றன. இந்நிலையில் மதத்தின் அடிப்படையில் இருக்கும் சட்டங்களையம் ஒன்றிணைத்து


பொது சிவில் சட்டம் உருக்குவதே இந்த பொது சிவில் சட்டம் ஆகும்.


இந்தியாவில் மதமாற்றங்கள் அதிகம் நடைபெறுகிறது, அதை தடுக்க மதமாற்ற தடை சட்டம் வடிவமைக்கப்படும். இதன் முதற் கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பணங்களை தடுத்துள்ளது. பல ஆயிரம் என்.ஜி.ஓ களை முடக்கியும் உள்ளது. இது தொடர்பாக இந்த கூட்ட தொடரில் விவாதிக்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News