தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி முனையங்களை பயன்படுத்த ஜெர்மனி முன்வரவேண்டும்-மோடி அழைப்பு.!
தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி முனையங்களை பயன்படுத்த ஜெர்மனி முன்வரவேண்டும்-மோடி அழைப்பு.!
By : Kathir Webdesk
இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் மெர்கலுக்கு டில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பிரதமர் மோடியுடன் சில நிமிடங்கள் ஆலோசித்தார். இதனையடுத்து இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதாவது: இன்று இந்தியா, ஜெர்மன் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகள் இடையே வர்த்தகம் பெருகி உள்ளது. மெர்கல் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறார். அவரை மகிழ்வோடு வரவேற்கிறேன். இதற்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தொழில்நுட்ப முன்னேற்றம், வேளாண், பயங்கரவாத ஒழிப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துளோம். வெளியுறவு துறையில் ஒத்துழைப்பு, முதலீடு பெருக்கம் ஆகியவற்றில் ஜெர்மன் முழு உதவி செய்வதாக கூறியுள்ளது. இது இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உதவும்.
தமிழகம் மற்றும் குஜராத்தில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி முனையங்களை பயன்படுத்த ஜெர்மனி முன்வரவேண்டும்.தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி முனையங்களை பயன்படுத்த ஜெர்மனி முன்வரவேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.