Kathir News
Begin typing your search above and press return to search.

தானம் நல்லது தான்.ஆனால் எவற்றையெல்லாம் தானமாக வழங்க கூடாது என தெரியுமா?

தானம் நல்லது தான்.ஆனால் எவற்றையெல்லாம் தானமாக வழங்க கூடாது என தெரியுமா?

தானம் நல்லது தான்.ஆனால் எவற்றையெல்லாம் தானமாக வழங்க கூடாது என தெரியுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 1:59 AM GMT

தானமும் தர்மமும் அறம் முகுந்த செயலாக கருதப்படுகிறது. பிறருக்கு தானம் கொடுப்பதால் நம் கர்ம வினைகளை எரிக்கப்படுகின்றன. இதன் மூலம் சுபிக்‌ஷமும் நல்வாழ்வும் கிட்டும் என்பது நம்பிகை.

தானம் என்பது மிக எளிமையான விதி, நாம் எதை செய்கிறோமோ அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்.

அதே வேளையில் ஒருவருக்கு கொடுப்பதால் எனக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மனபான்மையில் ஒருவர் தானம் கொடுப்பார் எனில் அது தானத்தின் முழு பயனையும் ஒருவருக்கு கொடுக்காது. மாறாக, ஒரு பழைய பழமொழி ஒன்று உண்டு அதாவது, இடதுக்கை கொடுப்பது வலதுகைக்கு தெரியக்கூடாது என்பார்கள். எனவே எதிர்பார்பற்ற தானமே முழு பயனை தரும்.

சில சமயங்களில் ஜோதிடர்கள் பரிகாரம் சொன்னார்கள் என சிலருக்கு சிலதை தானம் கொடுப்போம். ஆனாலும் கூட பரிகாரங்களுக்காக இல்லாமல் நாம் முழு அர்பணிப்பு உணர்வோடு செய்கிற தானம் நமக்கு முழு பலனை தரும்

அதே வேளையில் தானத்தில் கொடுக்கக்கூடாதவை என்று சில உண்டு. தற்போதைய வீட்டு விஷேசங்கள், ஏன் சில கோவில் பண்டிகைகளில் கூட ப்ளாஸ்டிக்கினால் ஆன டப்பாக்களை, ப்ளாஸ்டிக் பொருட்களை பரிசாக வழங்குகின்றனர். ஒரு போதும் தானமாக ப்ளாஸ்டிக் பொருட்களை கொடுக்காதீர்கள். அது வறுமையின் அறிகுறி என கருதப்படுகிறது.

வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்களை உணவு சமைக்கும் பாத்திரங்களை தானம் கொடுக்காதீர்கள் அது நம் வீட்டின் செல்வத்தை கொடுப்பதை போன்றது.

உங்கள் பழைய துணிகளை இல்லாதவர்கள் கேட்பதன் பெயரில் கொடுப்பது வேறு. பழைய துணிகளையே பிராதான தானமாக கொடுப்பது வேறு. உபயோகித்த துணிகளை ஒருவருக்கு பிரதான தானமாக வழங்குதல் மிகுந்த கஷ்டத்தை கொடுக்கும் .

எண்ணெய் தானம் சனி பகவானுக்கு உகந்தது என்ற போதும், கெட்டுவிட்ட எண்ணெய், துர்நாற்றம் வீசும் எண்ணெய், அல்லது உபயோகித்த எண்ணெயை தானமாக வழங்கினால் அது சனி பகவானின் கோபத்தை தூண்டுவதாகும்.

மேலும் கெட்டுவிட்ட அல்லது புளித்த உணவுகளை தானம் கொடுத்தால் வீட்டில் இருக்கும் உறவுகளுக்கு இடையே விரிசல் விழும் என்பது ஐதீகம்

மேலும் கத்திரி, கத்தி போன்ற கூர்மையான பொருட்களை தானம் வழங்குதல் நமக்கு மிகவும் நெருங்கியவரின் உறவினை பாதிக்கும் தன்மையை உடையதாகும்.

ஒரு போதும் நீங்கள் உங்களுடையதை வழங்கியதாக என்னாதீர்கள். இந்த சமூகத்தில் இருந்து எதை எடுத்தீர்களோ அதையே இந்த சமூகத்திற்கு வழங்குகிறீர்கள் என்ற நன்றியுடன் வழங்குங்கள். முழு மனதுடன் தானம் வழங்குங்கள், மொத்த பிரபஞ்சமும் உங்களோடு இணைந்திருக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News