“குருநாதன் வைகோவின் மகிமையே மகிமை” - 11 மணிக்கு பிரதமர் மோடியிடம் 370-வது பிரிவை நீக்ககூடாது என்றார்; 1 மணி நேரத்தில் ரத்தானது!!
“குருநாதன் வைகோவின் மகிமையே மகிமை” - 11 மணிக்கு பிரதமர் மோடியிடம் 370-வது பிரிவை நீக்ககூடாது என்றார்; 1 மணி நேரத்தில் ரத்தானது!!
By : Kathir Webdesk
பிரதமர் நரேந்திர மோடியை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைகோ, காலை 11 மணிக்கு சந்தித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ காஞ்சிப் பட்டாடை அணிவித்தார். இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.
அப்போது மோடிக்கு கோரிக்கை மனுவையும், திருக்குறள் நூலையும் வைகோ, பரிசாக அளித்தார்.
வைகோ அளித்த கோரிக்கை மனுவில், “காஷ்மீர் மாநிலத்தில், இந்திய அரசியல் சட்டம் 370, 35ஏ பிரிவுகளை மத்திய அரசு திருத்தினால் அதன் விளைவுகள் விபரீதம் ஆகிவிடும்” என்று குறிப்பிட்டு இருந்தார். நேரிலும் இதனை தெரிவித்தார்.
பிரதமர் மோடியிடம் வைகோ மனு அளித்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக மாநிலங்களவையில் காஷ்மீர் மாநிலத்திற்கான சட்ட பிரிவு 370, 35A ஆகியவற்றை ரத்து செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
அது மட்டுமல்லாமல், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் அமைக்கப்படுவதாகவும் அமித்ஷா அறிவித்தார்.
குருநாதன் வைகோவின் மகிமையைப்பார்த்தீர்களா? அவர் மனு கொடுத்து ஒரு மணி நேரம் முடிவதற்குள் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பறி போனது.
வைகோவின் ராசி அப்படி! என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்