திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவில் கோவிலில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை - முருக பக்கதர்களை அரசு அலைக்கழிப்பது எதற்காக?
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்ற அதிர்ச்சி அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
By : Mohan Raj
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்ற அதிர்ச்சி அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இந்த மாதம் 25ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கந்தசஷ்டி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது, 'கந்த சஷ்டி திருவிழா காலங்களில் நகர் முழுவதும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் செல்போன், தொலைபேசி சீராக இயக்கத்தில் இயங்க தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 லட்சம் லிட்டர் வீதம் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க குடிநீர் வாரியம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்' என்றார்.
மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவில் மாலை அணிவித்து வரும் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். நாள் கணக்கில் விரதம் இருந்து திருச்செந்தூருக்கு மாலை அணிவித்து முருகர் பெருமானை தரிசிக்க வரும் பக்தர்கள் கோவிலில் தங்கள் அனுமதி இல்லை என்று கூறியது பக்தர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முருக பெருமான் கோவிலில் தங்குவதற்கு அரசு இவ்வளவு கெடுபிடிகள் செய்வது தவறு என்ற கருத்துக்களும் ஆங்காங்கே எழுந்த வண்ணம் உள்ளன.