ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி: விவசாயிகளுக்கு பயிற்சியை வழங்க முடிவு!
ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகமாக மகசூல் பெரும் வகையில் விவசாயிகளுக்கு புதிய பயிற்சி.
By : Bharathi Latha
மருத்துவத் தாவரங்களை பயிரிடும் போது, அதிக மகசூல் பெறுவதற்கான நல்ல வேளாண் முறைகளை பின்பற்ற விவசாயிகளுக்கு பயிற்சியை வழங்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ தாவர வாரியமானது மருத்துவத் தாவரங்கள் நிலையான மேலாண்மை, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய துறைத் திட்டம் தொடங்கப்பட்டது.
அதன் மூலம் கல்வி, தகவல், பரிமாற்றம் நடவடிக்கையின் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துறை சார்ந்த பயணங்கள் திறன் மேம்பாட்டு நடடிவக்கைகளை மேற்கொள்ள நிதி ஆதாரங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். தேசிய மருத்துவத் தாவர வாரியம் 126 திட்டங்களுக்கு நிதி உதவி செய்து, மருத்துவத் தாவர சாகுபடிக்குப் பல்வேறு வகையில் பயனளித்து வருகிறது.
கடந்த 2017-18 முதல் 2021-2022 ஆண்டுக் காலகட்டத்தில் இந்தத் திட்டத்திற்கான பட்ஜெட் ரூ.3079.116 லட்சமாகும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமான பதிலளித்துள்ளார். விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாகவே மோடி அரசாங்கம் விளங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Input & Image courtesy: News