Kathir News
Begin typing your search above and press return to search.

பட்டாசு கொளுத்துபவர்களுக்கு அரசு மற்றும் சுற்றுச்சூழல் வாரியம் அறிவுரை.!

பட்டாசு கொளுத்துபவர்களுக்கு அரசு மற்றும் சுற்றுச்சூழல் வாரியம் அறிவுரை.!

பட்டாசு கொளுத்துபவர்களுக்கு அரசு மற்றும் சுற்றுச்சூழல் வாரியம் அறிவுரை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Oct 2019 11:10 AM IST


பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தாற்காலிக செவிட்டுத் தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. 125 டெசிபல் அல்லது 145 டெசிபல் உச்ச அளவுக்கு மேல் ஓசையை எழுப்பும் வெடிகளை தயாரிப்பது, விற்பது மற்றும் வெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.


இந்த வித பட்டாசுகளை வெடிக்கும் போது கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு,  கன உலோக ஆக்ஸைடு மற்றும் மிதக்கும் நுண் துகள்கள்,  காற்றில் கலந்து சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட  நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தீபாவளிப் பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாட கீழ்காணும்ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகமும், மாசுக் கட்டுப்பாடு  வாரியமும் வழங்குகிறது.


மாசுக் கட்டுப்பாட்டு வாரிய யோசனைகள்  உச்சநீதிமன்ற ஆணைப்படி இரவு 10 மணி முதல்


காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
 மருத்துவமனைகள், பள்ளிகள்,  நீதிமன்றங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வெடிகளை வெடிக்கக்கூடாது.


  குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது. பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம். மேலும் குழந்தைகளின் சட்டைப் பைகளில் பட்டாசுகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது.
போட்டிக்காக பட்டாசு வெடிகளைக் கொளுத்தாமல், திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக வெடிக்கலாம்.


  சரவெடியை நெருக்கமான குறுகிய சந்துகள் அடுக்குமாடி குடியிருப்புகளின் மத்தியில் வெடிக்கக்கூடாது.
போக்குவரத்து அதிகமுள்ள சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசுகளை கொளுத்த வேண்டாம். Â


  குடிசைகள் மற்றும்  எளிதில் தீப்பற்றும் பொருள்கள் இருக்கும் இடங்களில் ராக்கெட் வெடிகளை வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு கொளுத்துவதற்கு தீப்பெட்டியை பயன்படுத்தாமல்  நீளமான ஊதுபத்திகளை உபயோகிப்பது நல்லது.


  பட்டாசு கொளுத்தும் போது தளர்ந்த (தொள தொள) ஆடைகளை அணிய வேண்டாம். கடினப்பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன் இறுக்கமாக இருப்பது நல்லது.


  தீக்காயம் ஏற்படும்போது அதிகப்படியான தண்ணீரை காயத்தின் மேல் ஊற்ற வேண்டும். உடனடி சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல வேண்டும்.


  கண்ணில் ஏற்படும் தீக்காயங்களை நிறைய தண்ணீர்விட்டு 10 நிமிடங்களுக்கு குறையாமல் கழுவவேண்டும். பிறகு மருத்துவமனைக்கு செல்லவும்.


  அடுக்குமாடிக் குடியிருப்புகளை பொறுத்த வரையில் பொது வராந்தாக்களில் சங்கு சக்கரம் போன்ற தரையில் சுற்றும் பட்டாசுகளை கொளுத்தக் கூடாது. தரை கருப்பாகி நீண்ட நாட்களுக்கு கருப்பாகிவிடும்.  அதே போல அடுக்குமாடி குடியிருப்புகளின் மொட்டை மாடிகளில் யானைக்கால் பட்டாசுகள், இலட்சுமி பட்டாசுகள், எலக்ட்ரிக் பட்டாசுகள் உள்பட எந்த வித சப்தம் தரும் வெடி பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது. இவைதளத்தின் வலிமையை பலகீனமாக்கும். மேலும் சம தளத்தின் மீது பள்ளங்களை தோற்றுவிக்கும்.


  வெடி பட்டாசு பிரியர்கள் மண் தரை உள்ள மைதானப் பகுதியை தேர்வு செய்து கொள்வது நல்லது.


வீட்டுக்குள் படுக்கை அறை, சமையல் அறை, பொருள்கள் குவிந்துள்ள அறை, குறிப்பாக துணிகள் அதிகம் குவிந்துள்ள அறைகளில் எந்த பட்டாசையும் பயன்படுத்தக் கூடாது.


ஹால் மற்றும் கூடப்பகுதிகள், கேரிடார்கள் பகுதியில் உள்ள தீ பற்றும் பொருள்களை அப்புறப்படுத்தி விட்டு வெடியற்ற பட்டாசுகளை பயன் படுத்தலாம்.


 வீட்டுக்குள் பட்டாசு கொளுத்தும் போது ஜன்னல்கள், நுழை வாயில், பால்கனி வாயில் அனைத்தையும் நன்றாக திறந்து வைக்கவும், புகையை சேமிக்கக் கூடாது. இந்த புகை பெரியவர்கள், நோயுற்றவர்கள், சிறு கைக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.


 அடுக்கு மாடிக் குடியிருப்பாளர்கள் தங்களால் உருவாகும் பட்டாசுக் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்திவிட வேண்டும். குப்பைகளின் மீது மழை நீர் கலக்கும்போது மேலும் அசுத்தம் உண்டாகும்.
தீபாவளிப் பண்டிகையை ஒலி மாசு ஏற்படுத்துகின்ற மற்றும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தவிர்த்து வண்ணமிகு ஒளி ஏற்படுத்தும் பசுமை வகை பட்டாசுகளை குறைந்த அளவில் உபயோகித்து உற்சாகத்துடன் கொண்டாடி சுற்றுச்சூழலைக் காப்போம். ஒளிப் பண்டிகையான தீபாவளியை ஒலி மாசற்ற பண்டிகையாக கொண்டாடுவோம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News