Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் வெட்டி கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் மகளுக்கு அரசு வேலை!

கோவையில் வெட்டி கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் மகளுக்கு அரசு வேலை!

கோவையில் வெட்டி கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் மகளுக்கு அரசு வேலை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Nov 2019 4:05 PM IST


தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு தீனிபோட்டு வளர்த்துவிட்ட புண்ணியம் திமுகவின் முதல் தலைவர் கருணாநிதியையே சாரும். அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டை தீவிரவாதிகள் குண்டு வைத்து சீரழித்தனர்.


காவல்துறையினருக்குகூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் என்பது வரலாற்று உண்மை.


கோவை உக்கடம் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றியவர் செல்வராஜ். இவர்,1997-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி பணியில் இருந்தபோது, 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தார் காவலர் செல்வராஜ். ஆனால் அவர்களிடம் எந்தவிதமான ஆவணங்களும் இல்லை. இதனால் அவர்களுக்கு செல்வராஜ், அபராதம் விதித்தார்.


இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த 3 பேரும், பெரும் கும்பலை அழைத்து வந்தனர். அவர்கள் காவலர் செல்வராஜை நடுரோட்டில், பொது மக்கள் முன்னிலையில் வெட்டிக் கொலை செய்தனர்.


முதல்வர் கருணாநிதி என்பதால், தீவிரவாதிகளின் ஆட்டம் எல்லை மீறி சென்றது. காவல் செல்வராஜ் கொலையின் நீட்சிதான் கோவையில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு. 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் 58 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். அதில் ஏராளமானோர் இன்றுவரை உடல் ஊனமுற்றவர்களாக வாழ்க்கையை தள்ளிக்கொண்டு இருக்கின்றனர்.


காவலர் செல்வராஜ் கொலைசெய்யப்பட்டபோது, அவரது மனைவி ஜெயந்தி, நிறைமாத கர்பிணியாக இருந்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு லாவண்யா என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார். பல்வேறு இன்னல்களைத் தாண்டி லாவண்யாவை வளர்த்து ஆளாக்கினார் ஜெயந்தி.


காவலர் செல்வராஜ் பணியில் இருக்கும்போது இறந்ததால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். அந்த வேலை 21 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது செல்வராஜ் மகள் லாவண்யாவுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு கோவை வடக்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் காவல் துறையில் உள்ள பல நல்ல உள்ளங்களின் கடுமையான தொடர் போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்துள்ளது.


லாவண்யா தனது தாயுடன் போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரணை சந்தித்து பணிநியமன ஆணையை காண்பித்து வாழ்த்து பெற்றார்.


லாவண்யாவிற்கு, அரசு வேலை கிடைத்துள்ளது காவல்துறை ஊழியர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News