அதிகாரிகள் ஆய்வு செய்யாததால் நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணடிப்பு: நீதிபதிகள் வேதனை!
அதிகாரிகள் தங்களுடைய கடமைகளை சரியாக செய்யாததால் நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணாக்கப்படுகிறது.
By : Bharathi Latha
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்திருக்கிறார். அதாவது அவரது மனைவி சில உறுப்பினர்களுடன் வந்து தன்னை தாக்கியதாக கூறி புகார் அளித்தார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சரவணன் மீது மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி 2021 ஆம் ஆண்டு சரவணன் மீது வழக்கு ரத்து செய்தனர். மேலும் சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை விரைவாக முடிக்க போலீசுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் உத்தரவின்படி போலீசார் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று தெரிவிக்கிறது. இதன் காரணமாக மீண்டும் சரவணன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தகவல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அடுத்தடுத்த வேலை செய்யாது இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் பதிவான வழக்குகள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும்.
இதை அதிகாரிகள் செய்ய தவறினால் கோட்டின் பொன்னான நேரம் வீணாகிறது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இனி அதிகாரிகள் தங்களுடைய கடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்தனர்.
Input & Image courtesy: Dinamalar