Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானை அதிரடியாக கைப்பற்றப்போகும் சீனா - ஆடி அடங்கியது ஆணவ வெறி : இந்தியாவை பகைத்துக்கொண்டதால் வந்த வினை!

பாகிஸ்தானை அதிரடியாக கைப்பற்றப்போகும் சீனா - ஆடி அடங்கியது ஆணவ வெறி : இந்தியாவை பகைத்துக்கொண்டதால் வந்த வினை!

பாகிஸ்தானை அதிரடியாக கைப்பற்றப்போகும் சீனா - ஆடி அடங்கியது ஆணவ வெறி : இந்தியாவை பகைத்துக்கொண்டதால் வந்த வினை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Sept 2019 11:23 AM IST


பாகிஸ்தான் சீனா உறவு குறித்து அரசியல் விமர்சகர் நாராயணன் குவராவில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆதாரத்துடன் பதில் கூறியுள்ளார்.


பாகிஸ்தான் சீனா உறவு என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது இந்த பழமொழியே "நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்".


1951-ஆம் ஆண்டு முதல் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே உறவு இருந்து வந்தாலும், சீனாவுடனான தனது நட்பு எவரெஸ்ட் சிகரத்தை விட உயர்ந்தது, பெருங்கடல்களை விட ஆழமானது, எஃகு விட வலிமையானது, தேனை விட இனிமையானது என்று பாகிஸ்தான் கூறிவந்தாலும்,இன்றைக்கு அவ்விரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு என்பது கந்து வட்டி கொடுப்பவர் மற்றும் பெறுபவர்களுக்கு இடையே உள்ள உறவை போன்றது.


கடன் தொகை வட்டியுடன் திரும்ப வரவேண்டும் என்ற நோக்கில் அல்லாமல் சொத்தை கைப்பற்றுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்து வழங்கப்படுவது கந்து வட்டி. அதே போல் உலகில் தனது ஆளுமையை செலுத்துவதற்காகவும், மூலோபாய உள்நோக்கத்துடனும், பூலோகத்தில் உள்ள பல முக்கியமான இடங்களையும்/ துறைமுகங்களையும் கைப்பற்றும் நோக்கில் சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு கடன் (அடைக்க முடியாத வகையில்) வழங்கி அதை கையகப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், எண்ணெய் போக்குவரத்துக்கான மாற்று வழிக்காகவும் பாகிஸ்தானின் கவாடர் துறைமுகத்தை குறிவைத்து தனது கடன் பொறியில் பாகிஸ்தானை அண்மையில் சிக்க வைத்தது சீனா.


சீனா கடன் வழங்கிய நாடுகளின் பட்டியல்:





கீழுள்ள இணைப்பில் 29-32-ஆம் பக்கங்களில் சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு சீனா வழங்கிய கடனை தள்ளுபடி செய்த தொகைகளை காணலாம்.


https://www.cgdev.org/sites/default/files/examining-debt-implications-belt-and-road-initiative-policy-perspective.pdf


சீன வங்கிகள் கடன் வழங்க, சீன நிறுவனங்கள் வளர்ச்சி திட்ட ஒப்பந்தங்களை கைப்பற்ற, சீன பணியாளர்கள் பணி புரிய, கடன் சுமை மட்டும் பாகிஸ்தானியர்கள் தலையில் விழுகிறது. அதாவது சீனாவில் இருந்து வரும் பணம் சீனாவுக்கு திரும்ப செல்கிறது. பாகிஸ்தான் நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தங்களும் கிடையாது, ஆதலால் பாகிஸ்தானியர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடையாது, போதாததற்கு சீன நிறுவங்களுக்கு பாகிஸ்தான் அரசு வரி சலுகைகளும் அளிக்கிறது. இதனால் உள்நாட்டு நிறுவனங்களால் சீன நிறுவனத்துடன் போட்டிபோட இயலவில்லை, அதுமட்டுமல்லாமல் பல்வேறு திட்டங்களுக்கு சீனா நிதி வழங்கவேண்டுமானால், திட்டங்கள் அனைத்தும் சீன நிறுவங்ககளுக்கே செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆங்கிலத்தில் கூறவேண்டுமானால் "China is looting Pakistan right, left and centre"


ஆயுத குவிப்பிலும் சீனாவிடம் பாகிஸ்தான் அதிக பணத்தை செலவு செய்கிறது. SIPRI என்றழைக்கப்படும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் படி, சீனாவிடமிருந்து ஆயுதம் கொள்முதல் செய்யும் நாட்டில் முதலிடம் பிடிப்பது பாகிஸ்தான். சீனாவில் மொத்த ஏற்றுமதியில் 37% பாகிஸ்தானை சென்றடைகிறது.





ஆயுத இறக்குமதியில் 11-ஆவது இடத்தை வகிக்கும் பாகிஸ்தான், தனது கொள்முதலில் 70% சீனாவிடமிருந்தே பெறுகிறது.





ஜூலை 2018-ஆம் ஆண்டில் தனது தேர்தல் வாக்குறுதியாக, சீன உள்கட்டமைப்பு திட்டங்களை ரத்து செய்ய போவதாகவும், CPEC திட்டத்தின் 62 பில்லியன் டாலர் திட்டத்தின் விவரங்களை மக்களுக்கு வெளிப்படுத்த போவதாகவும் அறிவித்த இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமர் ஆனா பின் CPEC திட்டத்தின் இரண்டம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கையெட்பமிட்டு தொடங்கிவைத்தார்.


சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், சீனாவின் காலனி ஆகும் நிலையை பாகிஸ்தான் மெதுவாக எட்டிவருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News