Grok ஏஐ தடை!! எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு 72 மணி நேர கெடு!!

By : G Pradeep
மத்திய அரசு எக்ஸ் தளத்துக்கு 72 மணி நேர கெடு விதித்துள்ளது. Grok ஏஐ சாட்பாட் மூலம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக ரீ-கிரியேட் செய்யப்பட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து விரிவான அறிக்கையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வசம் அந்நிறுவனம் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் Grok ஏஐ நுட்பத்தை பயனர்கள் சிலர் தவறாக பயன்படுத்தி, பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரிக்குமாறு கோரி, அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருவதாக சிவசேனா கட்சியின் எம்.பி பிரியங்கா சதுர்வேதி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கடிதம் மூலம் முறையிட்டார்.
இதையடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பிரியங்கா சதுர்வேதி நன்றி தெரிவித்துள்ளார்.
