அனைவரின் நலனுக்காக என்ற கொள்கையில் செயல்படும் மத்திய அரசு : ஒட்டுமொத்த வளர்ச்சியே பிரதானம்!
ஒட்டுமொத்த வளர்ச்சியே அரசின் நோக்கம் என மக்களவைக் கேள்வியில் பதில் அளிக்கப் பட்டிருக்கிறது.
By : Bharathi Latha
ஏழை எளிய மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொண்டு வருகிறது. குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. விவசாயத்துறை முதல் விண்வெளி துறை பல்வேறு நவீனத்துவங்கள் புகுத்தப்பட்டு இருக்கிறது.
அனைவருடன், அனைவரின் நலனுக்காக என்ற கொள்கையில் அடிப்படையில் மத்திய அரசு ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நம் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக மத்திய அரசு ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துணை இணையமைச்சர் நாராயணசாமி மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார். ஷெட்யூல்டு வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினர் நல்வாழ்வுக்கு கடந்த 5 ஆண்டுகளில் பீகார் மாநிலத்திற்கு ரூ.1042.786 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News