ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்: 24 மணி நேர கவுன்டவுன் தொடக்கம்!
ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் 24 மணி நேர கவுன்டவுன் இன்று தொடங்குகிறது.
By : Bharathi Latha
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுத்தளத்தில் இருந்த MLV 3 என்று ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 என்ற ராக்கெட்டை நாளை நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. இதில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நெட்வொர்க் அக்சஸ் அசோசியேட்டி லிமிடெட் என்று நிறுவனத்திற்கு ஒப்பந்தமான 36 பிராண்பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.
இவை பூமியில் குறைந்த சுற்று பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இதற்காக இறுதி கட்டப் பணிக்கான 24 மணிநேர கவுண்டன் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு துவங்குகிறது. தொடர்ந்து விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றார்கள். ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் நேரில் பார்வையிடுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் ஐந்தாயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர்கள் மாடர்ன் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இங்கிருந்து பார்வையாளர்கள் ராக்கெட் கவுண்டவுனில் கலந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இங்கு செல்ல விரும்புகிறவர்கள் http://lvg.sharmtov.in என்ற இணையதள முகவரியில் இவற்றைப் பார்வையிடுவதற்கு செல்ல விரும்புவோர் பதிவு செய்து கொள்ள இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இது குறித்து பல்வேறு தகவல்களை தங்களுடைய அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News