GST வசூல் சாதனையின் உச்சம்.. ரூ.2.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு..
By : Bharathi Latha
2024 ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) ஒட்டுமொத்த வசூல் சாதனை அளவாக ரூ.2.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனையின் அதிகரிப்பு காரணமாக, இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட, 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. திருப்பி செலுத்தியதற்கு பின்னர் நிகர ஜிஎஸ்டி வருவாய் ஏப்ரல் மாதத்தில் ரூ.1.92 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 17. 1 சதவீதம் அதிகமாகும்.
ஏப்ரல் மாத வசூல் அம்சங்கள் மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ. 43,846 கோடி, மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.53,538 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ரூ. 99,623 கோடி (இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 37,826 கோடி, செஸ் ரூ.13,260 கோடி ஆகும். அரசுகளுக்கு இடையிலான தீர்வு இது ஆகும். ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் வசூலிக்கப்பட்ட தொகையில் மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.50,307 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.95, 138 கோடியும் வழங்கியுள்ளது.
வழக்கமான தீர்வுக்கு பின்னர் இது, மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.94,153 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.95,138 கோடியும் மொத்த வருவாயாக உள்ளது. 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டில் 12,210 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இது 11,559 கோடி என்னும் 2023-ம் ஆண்டு வசூலை விட, 6 சதவீதம் அதிகமாகும். புதுச்சேரியை பொருத்தவரை இது 13 சதவீதம் அதிகரித்து, 247 கோடியாக இருந்தது.
Input & Image courtesy: News