Kathir News
Begin typing your search above and press return to search.

பலருடைய சொந்தவீடு கனவு நனவாகும் - தேக்க நிலையில் இருந்த சுமார் 6 லட்சம் வீடுகள் விற்க வாய்ப்பு

பலருடைய சொந்தவீடு கனவு நனவாகும் - தேக்க நிலையில் இருந்த சுமார் 6 லட்சம் வீடுகள் விற்க வாய்ப்பு

பலருடைய சொந்தவீடு கனவு நனவாகும் - தேக்க நிலையில் இருந்த சுமார் 6 லட்சம் வீடுகள் விற்க வாய்ப்பு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Feb 2019 5:57 PM GMT


மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்போதே வாங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் மூலம் பிரதமர் மோடி அரசின் 2022 ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கு ஒரு உத்வேகம் கிடைத்துள்ளது.


அத்துடன் மலிவு விலை குடியிருப்புகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 8 சதவீத ஜி.எஸ்.டி. வரி ஒரு சதவீதமாக குறைப்பட உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த வரிக் குறைப்புக்கு கட்டுமானத்துறை நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கட்டுமானத்துறை நிறுவனங்கள், வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரியைக் குறைத்திருப்பது புரட்சிகரமான நடவடிக்கை என்று பாராட்டு தெரிவித்துள்ளன. மேலும் மத்திய அரசின் இந்த ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு நடவடிக்கையால் விற்காமல் தேக்கநிலையில் இருந்த சுமார் 6 லட்சம் வீடுகள் விற்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வரிக்குறைப்பு மூலம் பலருடைய சொந்தவீடு கனவு நனவாகும் என்றும் தெரிவித்துள்ளன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News