நாட்டின் உயர் தொழில்நுட்பத்தை கண்முன் நிறுத்திய குஜராத் கெவாடியா தொழில்நுட்ப செயல் விளக்க மையம் - உள்ளே என்னென்ன இருக்கு தெரியுமா.?
நாட்டின் உயர் தொழில்நுட்பத்தை கண்முன் நிறுத்திய குஜராத் கெவாடியா தொழில்நுட்ப செயல் விளக்க மையம் - உள்ளே என்னென்ன இருக்கு தெரியுமா.?
By : Kathir Webdesk
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் கெவாடியாவில் தொழில்நுட்ப செயல் விளக்க மையத்தை தொடங்கி வைத்தார்.
தொழில்நுட்ப செயல் விளக்க மையம் காவல் துறை, துணை ராணுவப் படைகளின் பல்வேறு அரங்குகளைக் கொண்டதாகும். உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய பயங்கர ஆயுதங்கள் மற்றும் சாதாரண ஆயுதங்களை உள்ளடக்கிய நவீன தொழில்நுட்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மத்திய ஆயுதக் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, தேசிய பாதுகாப்புப் படை மற்றும் மாநில காவல் துறை பிரிவுகள் தங்களது நவீன தொழில்நுட்பத்தை அரங்குகளில் காட்சிப்படுத்தி உள்ளன. விமானப் பாதுகாப்பு, படைகளை நவீனப்படுத்துதல், டிஜிட்டல் முன்முயற்சிகள் போன்றவை இதில் முக்கிய அம்சங்களாகும்.
விமான நிலையங்களில் முகத்தை அடையாளம் காட்டும் திறன்மிகு தொழில்நுட்பம், தேசிய பாதுகாப்புப் படையின் சாகசங்கள், தொலை தூரக் கட்டுப்பாட்டில் இயங்கும் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அரங்கில் மையப்படுத்தப்பட்டிருந்தன.
அனைத்து அவசர அழைப்புகளுக்கும் ‘112’ என்ற ஒரே எண்ணை மையப்படுத்தும் முன்முயற்சியை மத்திய உள்துறை அமைச்சகம் பிரதானமாக காட்சிப்படுத்தியிருந்தது. பாலியல் குற்றங்கள் குறித்த தேசிய தரவுகள், இ-முலாகத் மற்றும் டிஜிட்டல் முன்முயற்சிகள், உள்துறை அமைச்சகத்தின் காட்சிப்பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
மத்திய ஆயுதக் காவல் படை அரங்கில், அந்தப் படையை சேர்ந்தவர்கள் பெற்ற தீரச் செயல்களுக்கான பதக்கங்கள் மற்றும் விருதுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 1939 முதல் சிஆர்பிஎப் பங்கெடுத்த போர்கள் நினைவு கூரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
குஜராத் காவல் துறை காட்சிப்படுத்தியிருந்த விஷ்வாஸ் திட்டம், நவீன தொழில்நுட்ப கியர்கள் ஆகியவற்றை பிரதமர் பார்வையிட்டார். தில்லி காவல் துறை, டிஜிட்டல் முன்முயற்சிகளையும், ஜம்மு-காஷ்மீர் காவல் துறை, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களையும் காட்சிப்படுத்தியிருந்தன