Kathir News
Begin typing your search above and press return to search.

எச்-1-பி விசா பற்றி அமெரிக்க தூதரக அதிகாரி அசத்தல் அப்டேட்!

எச்- 1-பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம். என்ற அறிவிப்பு இந்திய மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வரப் பிரசாதமாக கிடைத்துள்ளது.

எச்-1-பி விசா பற்றி அமெரிக்க தூதரக அதிகாரி அசத்தல் அப்டேட்!

KarthigaBy : Karthiga

  |  23 Jun 2023 10:45 AM GMT

அமெரிக்காவில் வேலை செய்ய இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு எச்.1-பி வகை விசாக்களை அந்த நாடு வழங்குகிறது. இது மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். அதன் பிறகு மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் மீண்டும் வேலை நீட்டிப்பு உள்ளிட்ட ஆவணங்களை காட்டி விசாவை புதுப்பிக்க வேண்டும். எச்-1- பி விசா வைத்திருந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் பணியாற்றினால் அவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறும் கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும்.


இத்தகைய சிறப்புள்ள விசாவை புதுப்பிப்பதற்காக அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலையை அமெரிக்கா தற்போது மாற்றி அமைத்துள்ளது. அமெரிக்காவிலேயே அங்குள்ள தூதரகம் சென்று விசாவை புதுப்பிக்க வழி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரக மூத்த அதிகாரி நேற்று தெரிவித்தார். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவர் அதிபர் ஜோபேடனை சந்திக்க இருந்த நிலையில் இந்த தகவலை அவர் வெளியிட்டார். அமெரிக்காவில் மிகப்பெரிய வெளிநாட்டு மாணவர் சமூகமாக மாறும் வேகத்தில் இந்தியர்கள் உள்ளனர். என்று அந்த அதிகாரி கூறினார்.


அமெரிக்கா கடந்த ஆண்டு இந்திய மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசாக்களை வழங்கியது. இது ஒரு சாதனையாகும். இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 20% அதிகமாகும். இந்த விசா புதுப்பிக்கும் புதிய நடைமுறையானது அமெரிக்காவில் படிக்க மாணவர்களுக்கும் வேலை தேடி செல்வதற்கும் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News