Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் ஊடகங்களின் முகத்திரையை கிழித்த ஹெச்.ராஜா!!

தமிழ் ஊடகங்களின் முகத்திரையை கிழித்த ஹெச்.ராஜா!!

தமிழ் ஊடகங்களின் முகத்திரையை கிழித்த ஹெச்.ராஜா!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Oct 2019 10:59 AM GMT


இந்து மதத்திற்கு சம்மந்தமுடைய என்ன விஷயமாக இருந்தாலும், அதை எதிர்க்கவேண்டும் என்ற தீய பழக்கம் பல பிரிவினைவாத அரசியவாதிகளும், ஊடகங்களும் எதிர்க்கிறார்கள் என்று பாஜக தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். பகவத் கீதையை படித்தால் மன சமநிலை வரும் என்று கூறினார்.


கிறிஸ்துவ மதவாதி கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோரை பின்பற்றும் வைகோ, வைரமுத்து ஆகியோர்தான் பகவத் கீதையை எதிர்க்கிறார்கள் என்று கூறினார். பெருபான்மை இந்து சமூகம் இந்து சமூதாயத்தை விரோதமாக பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் ஹெச்.ராஜா கூறினார்.


நியூஸ் 18 தொலைக்காட்சியில் கண்ணபிரானை இழிவாக பேசுவதை எவ்வாறு அனுமதிக்கிறார்கள் என்று ஹெச். ராஜா கேள்வி எழுப்பினார். ஊடகங்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.


தீபாவளி தமிழன் பண்டிகையா என்று கேள்வி எழுப்பும் இந்து விரோதிகளால், ஜெருசலத்தில் பிறந்த கிறிஸ்துவம் தமிழன் பண்டிகையா அல்லது அரேபியாவில் பிறந்த இஸ்லாம் இந்து பண்டிகையா என்று கேள்வி எழுப்ப முடியுமா என்று ஹெச்.ராஜா கூறினார்.


பொறியலில் பகவத் கீதை தேவையா என்று கேள்வி எழுவார்கள், பிளாட்டோ நூலும் அந்த பாடத்திட்டத்தில் இருப்பதை ஏன் கேள்வி கேட்கவில்லை என்றும் கேட்டார். ஹெச்.ராஜாவின் இந்த உண்மை சார்ந்த கேள்விகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story