Kathir News
Begin typing your search above and press return to search.

அக்கினி சிறகுகள் மலர்ந்த தினம் இன்று!!

அக்கினி சிறகுகள் மலர்ந்த தினம் இன்று!!

அக்கினி சிறகுகள் மலர்ந்த தினம் இன்று!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Oct 2019 12:19 PM IST


டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடியில் பிறந்தார். அவரது பிறந்த நாளை உலக மாணவர் தினமாக 2010 ஆம் ஆண்டில் ஜனா சபை அறிவித்தது. அவர் 2002 முதல் 2007 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான "பாரத் ரத்னா" உட்பட பல மதிப்புமிக்க விருதுகளால் கௌரவிக்கப்பட்டார். அவர் இயற்பியல் மற்றும் விண்வெளி பொறியியல் ஆகிய படிப்புகளை பயின்றார்.


இந்தியாவின் ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு, அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஆகிய அமைப்புகளில் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.


நாட்டின் சிவில் விண்வெளித் திட்டம் மற்றும் இராணுவ ஏவுகணை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததற்காக அவர் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அறியப்பட்டார். மேலும், 1998 இல், இந்தியாவின் போக்ரான் -2 அணுசக்தி சோதனைகளின் வெற்றிக்கு அவரின் பங்களிப்பு பெரிய காரணம்.


ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து வெளியேறிய பின்னர், டாக்டர் அப்துல் கலாம் கல்வித் துறையைத் தேர்ந்தெடுத்து, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஷில்லாங், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அகமதாபாத், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் இந்தூர் ஆகிய கல்வி நிறுவனங்களில் விசிட்டிங் பேராசிரியராக பணிபுரிந்தார். இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் திருவனந்தபுரத்தின் அதிபராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.


27 ஜூலை 2015 அன்று, டாக்டர் அப்துல் கலாம் ஐ.ஐ.எம் ஷில்லாங்கில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார், அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது மற்றும் அவரது உடல்நிலை மோசமாகிவிட்டது. இதனால் அவர் பெத்தானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கே உயிரிழந்தார்.


டாக்டர் அப்துல் கலாம் இன்று இந்தியாவில் உள்ள அனைவராலும் மதிக்கப்பட்டு, விரும்பப்பட்ட வரும் ஒரு சிறந்த நபராக திகழ்கிறார். இதனால் அவருக்கு மக்கள் அதிபர் என்ற பெயரும் உண்டு.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News