39 பந்துகளில் 105 ரன்கள் அடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய - ஹர்திக் பாண்டிய!
39 பந்துகளில் 105 ரன்கள் அடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய - ஹர்திக் பாண்டிய!

இந்தியா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவருக்கு முதுகுயில் ஏற்பட்டகாயத்தால் அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பிறகு ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை.
காயத்தில் இருந்து குணம் அடைந்து வந்த ஹார்திக் பாண்டியா தற்போது டாக்டர் டி. ஒய். பாட்டில் டி20 கோப்பை தொடரில் களம் இறங்கி விளையாடி வருகிறார்.
இதில் ஒரு போட்டியில் 39 பந்துகளில் 105ரன்கள் அடித்து விளாசியுள்ளார்.
இவர் ரிலையன்ஸ் 1 அணிகாக விளையாடி வருகிறார். ரிலையன்ஸ் 1 அணிக்கும் சிஏஜி அணிக்கும் இடையிலான ஆட்டம் செவ்வாய்கிழமை நடந்தது. இவருடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டததில் 39 பந்துகளில் 105ரன்கள் எடுத்த அவர் அதில் 8 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இதன் மூலம் இவருடைய ரிலையன்ஸ் 1 அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டு இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது.
இதே போட்டியில் பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்திக் பாண்டிய. சிஏஜி 151 ரன்களில் சுருண்டது.