இவர்தாங்க மோடியின் நம்பிக்கை நட்சத்திரம்! 370 நீக்கத்திற்கு நாள் குறித்தது இவர் தானம்!
இவர்தாங்க மோடியின் நம்பிக்கை நட்சத்திரம்! 370 நீக்கத்திற்கு நாள் குறித்தது இவர் தானம்!
By : Kathir Webdesk
பாகிஸ்தான் நடத்திய புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது இந்திய ராணுவம், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எவ்வாறு நடத்தலாம் என மாஸ்டர் பிளான் போட்டு கொடுத்துவார். பாலகோட் முகாம்கள் மீது குண்டு வீசி, பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவது எப்படி என, மோடிக்கு ஆலோசனை வழங்கியவர் கேரள கேடர், ஐ.பி.எஸ்., அதிகாரியான அஜித் தோவல், மோடி பிரதமரான, 2014ம் ஆண்டிலிருந்து இந்தப் பணியில் இருக்கிறார்.
காஸ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது வயதான ஒருவர், 'புல்லட் ப்ருப்' உடையை அணிந்து கொண்டு காஷ்மீரிகள் சிலருடன் சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருக்கிறார். காஷ்மீரில் நிலைமை சீரடைந்து வருகிறது என்பதைக் காட்ட, இந்த காட்சிகள் வெளியிடப்பட்டன புல்லட் ப்ருப் உடை அணிந்திருந்த அந்த நபர், இந்தியாவின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல்.
இவர் மீது, பிரதமர் நரேந்திர மோடி அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளார். இப்போது இவருக்கு, மத்திய அமைச்சருக்கு நிகரான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் அஜித் தோவல் உளவுத் துறை தலைவராக இருந்தார். கடந்த, காங்கிரஸ் ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளர் 2005ல், பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.2014 ஆம் ஆண்டு மோடி பிரதமரானதும், இவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக்கிவிட்டார்.தோவல், உளவுத் துறையில் பணியாற்றிய போது, பல, 'அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன்'களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின், உளவு அமைப்பான, 'மொசாத்' போல, வெளியே யாருக்கும் தெரியாமல், இவர் மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகளால், சக அதிகாரிகள், இவருக்கு, இந்தியாவின் 'ஜேம்ஸ் பாண்ட்' என, பெயரிட்டுள்ளனர். சீனா, பாகிஸ்தான் நாடுகளில் வேறு பெயர்களில் தங்கியிருந்து, பல உளவுத் தகவல்களை சேகரித்துள்ளதாக, இவருடன் பணியாற்றியவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப் பிரிவை நீக்க, நாள் குறித்து கொடுத்தது இவர் தான். பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரத்தில் சிக்கி உள்ளது; சீனா - அமெரிக்கா இடையே, வர்த்தக சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; பிரிவு, 370ஐ ரத்து செய்ய, இது தான் சரியான நேரம் என, பிரதமருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்.
இந்திய பாதுகாப்பு விஷயத்தில், முக்கிய பங்காற்றும் அஜித் தோவலுக்கு, 74 வயதாகிறது பார்ப்பதற்கு 55 வயது போல் தான் இருப்பார் இந்த ஜேம்ஸ் பாண்ட்