Kathir News
Begin typing your search above and press return to search.

அனைத்து ரயில் நிலையங்களில் வருகிறது ஹெல்த் ஏ.டி.எம்! ரயில்வே துறையின் அடுத்த சாதனை!!

அனைத்து ரயில் நிலையங்களில் வருகிறது ஹெல்த் ஏ.டி.எம்! ரயில்வே துறையின் அடுத்த சாதனை!!

அனைத்து ரயில் நிலையங்களில் வருகிறது ஹெல்த் ஏ.டி.எம்! ரயில்வே துறையின் அடுத்த சாதனை!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Oct 2019 12:53 PM IST


மத்தியில் ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இரயிலேவே துறையில் பல மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது.ஆளில்லா ரயில்வே கிராசிங் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. பயோ கழிவறைகள் நிறுவப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் பெட்டிகள் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


பல ரயில்வே தடங்கள் பிராட் கேஜ் வழியாக மாற்றப்பட்டு வருகின்றது, தேஜாஜ் ரயில் அறிமுகம் என பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது மோடி அரசு இதனை தொடர்ந்து தற்போது இரயில் நிலையங்களில் ஹெல்த் ஏ.டி.எம் எனும் உடற் சோதனை மையங்களை நிறுவப்பட்டு வருகின்றது.


இந்த சுகாதார மையங்களில் 16 வகையான உடற் சோதனைகளை மேற் கொள்ளலாம். இதன் ரிப்போர்ட் வெறும் 10 நிமிடங்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த ஹெல்த் ஏ.டி.எம்மில் பிஎம்ஐ, பிபி, பல்ஸ் ரேட், போன்றவற்றை எளிதில் தெரிந்து கொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.


இதற்கான கட்டணங்களாக பயணிகள்களுக்கு ரூ .50 யும் , இரயில்வே ஊழியர்கள் ரூ .10 மட்டுமே செலுத்த வேண்டும்.இதன் முதற்கட்டமாக லக்னோ மற்றும் டெல்லி இரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் 'ஹெல்த் ஏடிஎம்' நிறுவப்படுகின்றன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News