ஆரோக்கிய நன்மைகளை கொண்ட இந்த நீர் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Health benefits of cucumber water.
By : Bharathi Latha
வெள்ளரிக்காய்கள் ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் அதிகளவில் ஊட்டச்சத்து கூறுகளும், குறைவான அளவிலேயே கலோரிகளும் உள்ளன. வெள்ளரிக்காயில் வைட்டமின் B, C பீட்டா கரோட்டின் மற்றும் மாங்கனீசு ஆகிய தாதுக்கள் நிறைந்துள்ளன. வெள்ளரிகாயில் அதிகளவில் நீர்சத்து உள்ளது. மேலும், இதில் கூடுதலாக குறிப்பிடத்தக்க எலக்ட்ரோலைட்டுகளும், ஆக்ஸிஜனேற்ற கூறுகளும் இருக்கின்றன. தினசரி ஒரு கிளாஸ் வெள்ளரி நீர் பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது என்றும் உடல் நீரேற்றத்துடன் இருக்க உதவுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வெள்ளரி நீர் மிகவும் ஆரோக்கியமானதாகும்.
மேலும், இது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உடலில் நிரப்புகிறது. மற்றும் உடலில் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தடுக்கிறது. நாள் ஒன்றுக்கு ஒருமுறையாவது வெள்ளரி நீரை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், இவை தசை மண்டலத்தை வலிமையாக்குகிறது. இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். வெள்ளரிக்காய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் போன்ற ஊட்டசத்துக்கள் உடலுக்கு நன்மை அளிக்கிறது. வெள்ளரி நீர் மன சோர்வைக் குறைத்து மன அழுத்தத்தைத் தடுக்கிறது. வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. வெள்ளரி நீரின் உட்கொள்ளல், உடலில் சேரும் சோடியத்தை குறைக்கிறது. மேலும், உயர் இரத்த அழுத்த குறைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. வெள்ளரி நீரின் உட்கொள்ளல் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது. இது முக தசைகளை இறுக்குகிறது. வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் பல்வேறு வகையான தொற்று நோய்களை ஏற்படுத்தும், ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகின்றன.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, வெள்ளரி நீரில் உள்ள எலக்ட்ரோ லைட்டுகள் நன்மை பயக்கிறது. வெள்ளரி நீரை தயாரிப்பது மிகவும் எளிதானதாகும். மேலும் இவை உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.வெள்ளரி நீரை எவ்வாறு தயாரிப்பது? வெள்ளரிக்காய் தண்ணீரை தயாரிக்க ஒரு வெள்ளரிக்காய், ஒரு கிளாஸ் தண்ணீர், புதினா மற்றும் ஏதேனும் ஒரு சிட்ரிக் பழத்தை எடுத்து கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய்களை நன்றாக கழுவி அதன் தோலுடன், நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து கொள்ளுங்கள். குளிர்ந்த வெள்ளரி நீர் விரும்பத்தக்கது என்றால், வெள்ளரி துண்டுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். மேலும், இதன் சுவையை அதிகரிக்க எலுமிச்சை போன்ற சிட்ரிக் பழங்களை சேர்த்து ஒரு மணி நேரம் கழித்து உட்கொள்ளவும்.
Input & Image courtesy:Logintohealth