Kathir News
Begin typing your search above and press return to search.

க்லுடென் இல்லாத உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஏன்?

Health benefits of gluten free diet.

க்லுடென் இல்லாத உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஏன்?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Sep 2021 12:00 AM GMT

க்லுடென் என்பது கோதுமையில் காணப்படும் ஒரு வகை புரதமாகும். கோதுமை மட்டுமின்றி சோளம், பார்லி, கம்பு போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளிலும் க்லுடென் புரதம் அதிக அளவு காணப்படுகிறது. க்லுடென் புரதம் அதிகமாக உள்ள உணவு பொருட்களை உட்கொள்வதினால் உடல் எடை அதிகரிக்கிறது. இதன் காரணமாய் க்லுடென் இல்லாத உணவு பொருட்களை உட்கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். க்லுடென் என்பது கோதுமை, பார்லி, கம்பு மற்றும் மென்மாக் கோதுமைகளில் காணப்படும் புரதங்களின் குழு ஆகும். பின்வரும் உணவு பொருட்கள் க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தில் உட்கொள்ள வேண்டியவை ஆகும். அவை இறைச்சி, மீன், முட்டை, க்லுடென் இல்லாத பால் பொருட்கள், பால், தயிர் போன்றவை.


அனைத்து வகையான பச்சை காய்கறிகள், க்லுடென் இல்லாத பழங்கள். தானியங்களில் குயினோவா, அரிசி, பக்வீட், மரவள்ளிக்கிழங்கு, சோளம், தினை, அமராந்த், அரோரூட், டெஃப் மற்றும் க்லுடென் இல்லாத ஓட்ஸ் ஆகியவை ஆகும். ஸ்டார்ச் மற்றும் மாவு வகைகளில், உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு மாவு, சோளம், சோள மாவு, சுண்டல் மாவு, சோயா மாவு, பாதாம் மீல் மாவு, தேங்காய் மாவு, மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவு ஆகியவை ஆகும். அனைத்து வகையான நட்ஸூகள் மற்றும் விதைகள். அனைத்து வகையான தாவர எண்ணெய் மற்றும் வெண்ணெய். அனைத்து வகையான மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள். க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் விளைகின்றன. நல்ல உடல் பெரும்பாலான மக்கள் வயிற்று வீக்கம், வயிற்றுப்போக்கு மலச்சிக்கல், வாயு தொல்லை, சோர்வு போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தை மேற்கொள்கின்றனர். க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் செலியாக் நோய் வராமல் தடுக்க முடியும்.


க்லுடென் உணர்திறன் உள்ளவர்களுக்கு செரிமான பிரச்சினைகள் தொடர்பான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. செலியாக் நோயால் பாதிக்கப்பட்ட 215 பேர் ஆறு மாதங்களுக்கு க்லுடென் இல்லாத உணவுப் பழக்கத்தைப் பின்பற்றியதனால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற பிற சிக்கல்களைக் குறைக்க இயன்றது, என ஒரு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. க்லுடென் உள்ள உணவுகளை உட்கொள்வதினால் உடல் எடை அதிகரிக்கிறது. எனினும், நீங்கள் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து க்லுடென் உணவுகளை விலக்கி, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நிச்சயமாக உடல் எடையைக் குறைக்க இயலும்.

Input & Image courtesy:Logintohealth



Next Story
கதிர் தொகுப்பு
Trending News