மருத்துவ குணங்கள் ஏராளமாக கொண்ட ஜாதிக்காய் எண்ணெய் பற்றி தெரியாத விஷயங்கள் !
Health benefits of nutmeg oil
By : Bharathi Latha
ஜாதிக்காய் எண்ணெய் பிற எண்ணெய்களிலிருந்து வேறுபட்டதாகும். ஏனெனில், இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. மற்றும் இது பல நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஜாதிக்காய் எண்ணெய் மிகவும் பிரபலமாக இல்லாததால், இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்தத் தகவல்களை மிகச் சிலரே அறிந்துள்ளனர். இந்த எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. பெண்களை பொறுத்தவரை, ஜாதிக்காய் எண்ணெய் ஒரு வரமாகும். ஏனெனில் இது மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.
ஜாதிக்காய் விதைகளிலிருந்து ஜாதிக்காய் எண்ணெய் பெறப்படுகிறது. பெரும்பாலும், ஜாதிக்காய் உணவின் சுவையை அதிகரிக்கும் ஓர் மசாலாப் பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது. மேலும், பழங்காலங்களிலிருந்தே இதன் மருத்துவ குணங்களினால், இது பல்வேறு சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஜாதிக்காயிலுள்ள மருத்துவ குணங்கள் காரணமாக, இது பல்வேறு வகையான சோப்புகள் மற்றும் முகம் கிரீம் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காய் எண்ணெய் பல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் மருந்தாக செயல்படுகிறது.
ஜாதிக்காய் எண்ணெயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைத் தாக்கும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. இதில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. இவை உடலுக்குள் பாக்டீரியா பரவாமல் தடுக்கிறது. இது சிறுநீர் பாதையைத் தாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மற்றும் சிறந்த சுகாதாரத்தை மேம்படுத்துகிறது. ஜாதிக்காய் எண்ணெயில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, எனவே இந்த எண்ணெயை தவறாமல் பயன்படுத்துவது பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் தாக்குதல்களைக் குறைக்கிறது.
InputLogIntoHealth
Image courtesy:wikipedia