மனிதனுக்கு நன்மை பயக்கும் மூலிகைகளில் இதுவும் ஒன்று தானாம் !
Health benefits and side effects of ginger
By : Bharathi Latha
இஞ்சி மனித உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஒரு மூலிகையாக அறியப்படுகிறது. இஞ்சியில் வைட்டமின் A, B, E, காம்ப்ளக்ஸ் ஆகியவை உள்ளன. இதில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான், சோடியம், இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் பீட்டா-கரோட்டின் போன்ற தாதுக்களும் உள்ளன, இவை அனைத்தும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. வயிறு தொடர்பான நோய்களைத் தடுக்க இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரைப்பைப் பிரச்சினைகளை குறைப்பதிலும், குடல் வீக்கத்திலும், இது நன்மை பயக்கிறது. குடல் இயக்கங்களை மேம்படுத்துகிறது இஞ்சி வெளியேற்ற அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. குடல் அசைவுகள் தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் சிகிச்சையளிக்க உதவும் மருத்துவ பண்புகள், இஞ்சியில் நிறைந்துள்ளன.
இஞ்சியில் உள்ள வைட்டமின் B6 வெளியேற்ற அமைப்புக்கு பயனுள்ளதாக அமைகிறது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கிறது. கீல்வாதத்தால் பாதிக்கப்படுபவர்கள், இஞ்சியை தவறாமல் உட்கொள்ள வேண்டும். இதில் அதிக அளவில் கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது. இஞ்சி ஒரு இயற்கை வலி நிவாரணியாகும். இது தொண்டை வலியை நீக்குகிறது. இஞ்சி கொழுப்பின் அளவை பராமரிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதன் விளைவாக, இதயம் தொடர்பான நோய்களின் அச்சுறுத்தலைக் குறைக்க முடிகிறது. இஞ்சியில் உள்ள பொட்டாசியம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. இஞ்சி உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் சரியான அளவில் இன்சுலினை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஒற்றைத் தலைவலி வலியைக் குறைக்க இஞ்சி தேநீர் மிகவும் நன்மை பயக்கிறது. இதில் உள்ள வைட்டமின்களும், ஊட்டச்சத்து கூறுகளும் ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
சில சமயங்களில், இஞ்சி சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இஞ்சிக்கு ஒவ்வாமை உள்ள நபர்களுக்கு நாக்கில் வீக்கம், உடலில் அரிப்பு போன்ற சிக்கல்களை இது ஏற்படுகிறது. அத்தகையவர்கள் இஞ்சி உட்கொள்வதை நிறுத்த வேண்டும். இஞ்சி தேநீரை 5 கோப்பைக்கு மேல் உட்கொள்ளும் போது, ஒற்றைத் தலைவலி மற்றும் தூக்கமின்மையை ஆகியவை ஏற்படுகின்றன. உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் இஞ்சியைத் தவிர்க்க வேண்டும். இஞ்சியை அதிகமாக உட்கொள்வது, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும்.
Input & image courtesy:Logintohealth