Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்களுக்கு பயனளிக்கும் இந்தக் கிழங்கின் மகத்துவங்கள் !

Health benefits of sweet potato

பெண்களுக்கு பயனளிக்கும் இந்தக் கிழங்கின் மகத்துவங்கள் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Sep 2021 12:00 AM GMT

பெரும்பான்மையான மக்கள், சக்கரை வள்ளிக்கிழங்கை மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். பல வகையான சக்கரை வள்ளிக்கிழங்குகள் சந்தையில் விற்கப்படுகின்றன. கிழக்கு வகைகளிலே சக்கரை வள்ளிக்கிழங்கு மிகவும் சத்தானதாகும், இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. பிற பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் ஒப்பிடும்போது, இதன் விலை குறைவாகவே உள்ளது. சக்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் B மற்றும் வைட்டமின் C போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.


சக்கரை வள்ளிக்கிழங்கில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பல்வேறு வகையான ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன. சக்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் அழற்சி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. சக்கரை வள்ளிக்கிழங்கு செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது. சக்கரை வள்ளிக்கிழங்கிலுள்ள நார்ச்சத்துகள், உடலில் உள்ள நீரின் அளவை அதிகரிக்கிறது. சக்கரை வள்ளிக்கிழங்கு, உடல் எடையை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. வயிற்றுப் புண் பிரச்சினை உள்ளவர்கள் சக்கரை வள்ளிக்கிழங்கை கட்டாயமாக உட்கொள்ள வேண்டும்.இது வயிறு தொடர்பான வியாதிகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சக்கரை வள்ளிக்கிழங்கு உதவுகிறது.


பெண்களுக்கு பயனளிக்கும் சக்கரை வள்ளிக்கிழங்கின் ஆரோக்கிய நன்மைகள் இதோ, முடியின் வேர்களை வலுப்படுத்த பெண்கள் சக்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்ள வேண்டும். சக்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி ஆரோக்கியமாக வளர உதவுகின்றன. எண்ணெய் சருமம் உள்ள பெண்கள் முகத்தில் சக்கரை வள்ளிக்கிழங்கைப் பயன்படுத்த வேண்டும். தோலில் சக்கரை வள்ளிக்கிழங்கைப் பயன்படுத்த வேண்டும் எனில், முதலில், சக்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து அதில் தேனைச் சேர்த்து ஓர் பேஸ்டை தயார் செய்து முகத்தில் தடவவும். சக்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு நன்மை பயக்கிறது. இவை, சூரிய கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றன மற்றும் சருமத்தின் அமைப்பையும் தரத்தையும் மேம்படுத்துகின்றன

Input & Image courtesy:Logintohealth



Next Story
கதிர் தொகுப்பு
Trending News