அருமையான முளைக்கட்டிய பயறு வகைகளில் ஒளிந்து கிடக்கும் நன்மைகள் !
முளைக்கட்டிய பயிர்களை ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.
By : Bharathi Latha
முளைக்கட்டிய பயறு வகைகள் மிகவும் ஆரோக்கியமான உணவு என்பதால், இது பல ஆண்டுகளாக இந்திய மக்களின் உணவுப் பட்டியலில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த முளைக்கட்டிய பச்சை பயறு புரதச்சத்துக்கள் நிரம்பிய உணவுகளில் முக்கியமான ஒன்றாகும். சாதாரணமாக பயறு வகைகளைச் சாப்பிடுவதை விட, அவை முளைக்கட்டிய பிறகு ஊட்டச்சத்து மதிப்பு கணிசமாக மேம்படும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஒரு பயறு முளைக்கும் போது புரத உள்ளடக்கம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் உள்ளடக்கம் அதிகரிக்கும்.
புதிய முளைக்கட்டிய பயறுகளை சாலட் போன்றவற்றிலும் நாம் சேர்த்து பயன்படுத்தலாம். பயிர்கள் முளைக்கட்டியதும் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். முளைக்கட்டி இரண்டு நாட்களாகி விட்டால், அதை சமைத்து உட்கொள்வது நல்லது. இதனால் உணவு விஷமாகும் பிரச்சினை என்பது இருக்காது. முளைகட்டிய பயறுகளை அதிகம் வேகவைப்பதோ அல்லது பொறிப்பதோ அவற்றில் உள்ள சத்துகளைச் சிதைத்துவிடும். பொதுவாக, முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன.
பலர் காலை உணவாகவோ அல்லது நொறுக்குத் தீனியாகவோ முளைகட்டிய பயறுகளை உட்கொள்கின்றனர். அவை பார்வைத்திறனை மேம் படுத்துவதுடன் சருமத்துக்கும் புத்துணர்வு அளிக்கின்றன. இவற் றில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், உடலில் சுரப்பிகளைச் சீராகச் செயல்பட வைக்கின்றன. இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இவற்றில் இருக்கும் வைட்டமின் B, நியாசின், தைய மின் போன்ற சத்துகள் உடலில் ரத்த விருத்தியையும் ஏற்படுத்துகின்றன. உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை போன்றவற்றைத் தவிர்க்க இவை உதவக்கூடும்.
Input:https://food.ndtv.co m/food-drinks/6-benefits-of-sprouting-and-the-right-way-to-do-it-1691887
Image courtesy:wikipedi