உடல்நல ஆரோக்கியம் இவற்றை எல்லாம் சார்ந்துதான் இருக்கும் !
ஒருவரின் உடல் நல ஆரோக்கியத்திற்கும் அவரின் தூக்கத்தில் அளவிற்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?
By : Bharathi Latha
மனிதர்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்றுதான் கடவுளிடம் அதிகமாக மக்கள் கேட்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை நீங்கள் முதலில் எடுத்தீர்களா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் உங்கள் கையில் தான் உள்ளது. குறிப்பாக உங்களுடைய தூக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தற்பொழுது மனிதன் வாழ்க்கையில் பணம் முக்கியம் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் பணத்தை விட மிகவும் முக்கியமானது உங்கள் ஆரோக்கியம். பணத்தின் பின்னால் ஓடி உங்களுடைய தூக்கத்தை நீங்களே குறைத்துக்கொண்டால், நிச்சயம் உங்கள் ஆரோக்கியம் கேள்விக்குறியாக தான் இருக்கும்.
ஒவ்வொரு வயதினருக்கும் தேவையான தூக்கத்தின் அளவு பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் வயது ஒரு முக்கிய காரணி. வயது வித்தியாசத்தின் அடிப்படையில் அவரவர்களுக்கு தேவையான தூக்கத்தில் அளவும் வித்தியாசப்படும். சரி, எந்தெந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை முதலில் அறிந்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் சராசரியாக 14 மணி நேரம் தூங்கலாம் பனிரெண்டு வயது மேற்பட்ட குழந்தைகள் சராசரியாக ஒன்பது மணி நேரம் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
வயது வரம் பரிந்துரைக்கப்பட்ட தூக்க அளவில் படி, 18 வயதுக்கு மேற்பட்டோர் இரவில் மட்டுமே குறைந்தது 7 நேரம் தூங்க வேண்டும். நம் உடல் சீராக செயல்பட, ஒவ்வொரு வயதினரும் மேற்சொன்ன அளவிலான தூக்கத்தைப் பெறுவது மிகவும் அவசியம். ஏனென்றால் நாம் தூங்கும் சமயத்தில் தான், நம் உடல் ஆற்றலை மீட்டமைத்துக்கொள்ளும். அதுவும் குழந்தைகள் நன்றாக தூங்கினால் தான் அவர்கள் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். எந்தவொரு உடல்நல குறைபாடுகளும் எளிதில் ஏற்படாமல் இருக்கும்.
Input:https://m.timesofindia.com/life-style/health-fitness/health-news/sleeping-naked-can-be-good
Image courtesy: times of India