ஆயுர்வேதத்தின் படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த பானம் !
Ayurveda Tips.
By : Bharathi Latha
காலநிலை மாற்றங்களால் ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். மேலும் இதனால் தொண்டை புண் மற்றும் செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. அதுவுமில்லாமல் பரவிவரும் தொற்றுநோய்க்கு மத்தியில், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும், வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற சமயங்களில், நோயெதிர்ப்பு சக்தி, தொண்டைப் புண், உடல் எடைகுறைப்பு போன்ற அனைத்துக்கும் உதவியாக ஒரு பானம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அது உண்மைதான். அது இஞ்சி டீ தான். இதை சாதாரணமாக நம்முடைய வீட்டில் செய்து தரும் இந்த டீக்கு தனி மகிமை உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? இஞ்சியுடன் சேர்க்கப்படும் இதற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக நோய் தொற்றிலிருந்து ஒருவருடைய உடலை வலுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
எலுமிச்சை சாறு மற்றும் தேனுடன் ஒரு கப் இஞ்சி தேநீர் தயார் செய்து குடித்தால் உங்களின் பிரச்சினைகள் எல்லாம் மாயமாய் மறைந்துப் போகும். ஆயுர்வேத பயிற்சியாளரின் தகவலின்படி, காரமான மற்றும் சுவையான இஞ்சி தேநீர் அருமையான ஒரு இயற்கை மாமருந்து ஆகும். உங்கள் தொண்டை வறட்சியைக் குணப்படுத்தும். சோம்பலை நீக்கும். வாய்வு காரணமாக வயிற்று வலியைக் குறைக்க உதவும். உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும்.வீக்கத்தைக் குறைக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.
Image courtesy: times of India