தலை முடி உதிர்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு இதுதான் !
Heath benefits of shikakaai
By : Bharathi Latha
நாம் அனைவரும் ஷாம்பு விளம்பரங்களிலேயே சீயக்காய் என்னும் பெயரைக் கேள்விப்பட்டு உள்ளோம். சீயக்காய் தலை முடிக்கு மிகவும் நன்மை பயக்கிறது. மேலும், இது பிற மூலிகைகளிலிருந்து வேறுபட்டு உள்ளது. இது, தலை முடி உதிர்தல் பிரச்சினையைக் குணப்படுத்த உதவுகிறது. பெரும்பாலும், இது மத்திய பிரதேசத்தில் பயிரிடப்படுகிறது. சீயக்காயில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை நம் தலை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. முடி பராமரிப்புக்கு சீயக்காயை ஒரு சிறந்த மூலிகையாகும். சீயக்காய் தூள், சந்தையில் மிக எளிதாக கிடைக்கிறது.
சீயக்காய் அதிகளவில் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஓர் மூலிகையாகும். இதில் பல்வேறு வகையான வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் D, வைட்டமின் E,K மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. மேலும், இதில் குளுக்கோஸ், அராபினோஸ், ரம்னோஸ், ஆக்சாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், டார்டாரிக் அமிலம் ஆகியவையும் உள்ளன. பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களின் காரணமாக மன அழுத்தம் உண்டாகிறது. சீயக்காய் இயற்கையாகவே மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு மூலிகையாகும்.
இது மனதை அமைதிப்படுத்த உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இதனைத் தலையில் தடவுவதன் மூலம், தலைவலிக்கு சிகிச்சையளிக்க முடிகிறது. இதனைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வதன் மூலம், மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் போக்க இயலும். சீயக்காய் முடிக்கு பயனுள்ளதாக அமைகிறது. சீயக்காயுடன் முடியைக் கழுவுவதன் மூலம் தலை முடியை பலப்படுத்த இயலும் மற்றும் முடியின் நிறத்தை பராமரிக்க முடிகிறது. பேக்கிங் பவுடருடன் சீயக்காயைக் கலந்து துணிகளை துவைப்பதன் மூலம், துணிகளில் இருந்து கறைகளை நீக்கி பிரகாசிக்க வைத்திருக்க உதவுகிறது.
Input:https://m.netmeds.com/health-library/post/shikakai-traditional-uses-of-this-potent-ayurvedic-herb
Image courtesy:wikipedia