கேரளாவில் கடும் மழை சேதம்: சேதத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதா பிணராயி அரசு?
கேரளாவில் கடும் மழை சேதம்: சேதத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதா பிணராயி அரசு?
By : Kathir Webdesk
கேரளாவின் வரலாற்றில் 1924-ஆம் ஆண்டு, 61 நாட்களில் பெய்த கன மழையினால் பலத்த சேதம் ஏற்பட்டது. அதன் பிறகு 94 ஆண்டுகள் பெரிய அளவில் மழை சேதம் ஏற்பட்டதில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு (2018) மழையினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த சேதமானது 1924-ஆம் ஆண்டு ஏற்பட்ட சேதத்தைவிட 30 சதவீதம் அதிகமாக இருந்தது.
கடந்த ஆண்டு மழைக்கு 373 பேர் பனியானார்கள். கிட்டத்தட் பாதி கேரளா அழிந்தது போல் மிகப்பெரிய சேதத்தை கேரளா சந்தித்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் கடும் மழையினால் கேரளா மாநிலம் மீண்டும் கடும் சேதத்தை எதிர் கொண்டு வருகிறது.
கேரள மாநிலத்தின் 8 மாவட்டங்களில் கடந்த 8-ஆம் தேதி கன மழை பெய்யத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, அன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பரா, வயநாடு மாவட்டம் புதுமலா ஆகிய கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன.
மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பரா கிராமம், 35 வீடுகளுடன் 65 பேர் மட்டும் வசித்த கிராமம் ஆகும். அங்கு 8-ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, 60 பேர் உயிருடன் புதையுண்டு இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
12 அடி உயரத்துக்கு சேறும், சகதியும் மலைபோல குவிந்துள்ளது. வயநாடு மாவட்டம் புதுமலா கிராமம், தேயிலை தோட்டங்கள் நிறைந்த கிராமம் ஆகும். எண்ணற்ற வீடுகள், கட்டிடங்கள், கோவில், மசூதி ஆகியவை இருந்தன. நிலச்சரிவை தொடர்ந்து எல்லாம் தரைமட்டமாகி விட்டன.
மழை மற்றும் நிலச்சரிவுக்கு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இன்னும் ஏராளமானோரை காணவில்லை என்பதால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 1,551 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை கோயிலுக்கு என்று சில விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும், விரதமும் உண்டு. அவற்றை முறையாக கடைபிடித்து இருமுடி கட்டி சபரிமலைக்க சென்று ஐயப்பனை வழிப்பட்டால் நன்மை ஏற்படும்.
முக்கியமாக 10 வயதுக்கு மேல் 50 வயதிற்கு உள்பட்ட பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க முடிவு செய்து, இந்துமத நம்பிக்கை இல்லாத பெண்களை போலீஸ் துணையுடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொண்டு நிறுத்தினார் ஹிந்து மத வெறுப்பாளராக கருதப்படும் முதல்வர் பிணராயி விஜயன்.
கடந்த ஆண்டு, மழையினால் பொருட் சேதம், உயிர் சேதம் ஏற்பட்டது மட்டுமல்லை, தொடர்ந்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஒரே ஒரு எம்.பி. மட்டுமே கேரளாவில் கிடைத்தது. அது மட்டுமல்ல, அகில இந்திய அளவில் இரு கம்யூனிஸ்ட் கட்சிளுக்கும் மொத்தமே 5 எம்.பிக்கள் மட்டுமே கிடைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக வருகிற சட்டமன்ற தேர்தலில் கேரளாவிலும் கம்யூனிஸ்ட் ஆட்சியை இழக்கும் நிலை உள்ளது.
கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்ட கம்யூனிஸ்ட் அரசும், கட்சியும் தொடர்ந்து சிக்கல்களையே சந்தித்து வருகிறது.
இருப்பினும் அதற்கான பிராயச்சித்தம் எதையும் பிரணாயி விஜயன் அரசு செய்ய முன்வரவில்லை என்பதோடு, இப்போதும் சபரிமலை விஷயத்தில் இந்துக்களின் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்கும் நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.
கடந்த ஆண்டு ஏற்பட்ட சேதத்தை அடுத்து, எந்த பாடமும் கற்காத பிணராயி அரசு, இந்த ஆண்டும் மக்களை அவதிக்குள்ளாக்கி மழை சேதத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க முடியாத அரசாக இருக்கிறது.