Kathir News
Begin typing your search above and press return to search.

கல்லீரலை பாதிக்கும் இந்த நோய் பற்றிய தகவல்கள் !

What is meant by hepatitis B?

கல்லீரலை பாதிக்கும் இந்த நோய் பற்றிய தகவல்கள் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Sep 2021 12:41 AM GMT

ஹெபடைடிஸ் B முக்கியமாக மனிதனின் கல்லீரலிலைப் பாதிக்கிறது. ஹெபடைடிஸ் வைரஸ் அசுத்தமான தண்ணீரின் மூலம் அதிகமாக பரவுகிறது. சிலருக்கு, ஹெபடைடிஸ் B தொற்று நீண்ட நேரம் நீடித்த போதும் அந்த நபரால் அதைக் கண்டுபிடிக்க இயலாது, அத்தகைய சூழலில் அது நாள்பட்ட ஹெபடைடிஸ் என்று அழைக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் B என்பது ஹெபடைடிஸ் B என்ற வைரஸால் பரவும் தொற்று நோயாகும். பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நபரின் இரத்தத்தின் மூலமாகவும், உடல் திரவங்கள் மூலமாகவும் இந்த நோய் பரவுகிறது.


பாதிக்கப்பட்ட நபர்கள் உபயோகித்த ஊசிகள் மூலம் ஹெபடைடிஸ் B தொற்று பரவுகிறது. கர்ப்ப காலத்தில் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து ஹெபடைடிஸ் B தொற்று சிசுவிற்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் அவர் பயன்படுத்திய பொருள்களை மற்றவர்கள் பயன்படுத்துவதன் மூலமும் நோய் தொற்று பரவுகிறது. ஹெபடைடிஸ் B நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டறிவது கடினம். ஏனெனில், ஹெபடைடிஸ் B-க்கு பல அறிகுறிகள் உள்ளன. அதிக சோர்வு, வாந்தி மற்றும் வயிற்று வலி. பாதிக்கப்பட்ட நபரின் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல். தலைவலி மற்றும் குமட்டல். பாதிக்கப்பட்ட நபரின் உடலில் அதிக அரிப்பு ஏற்படுதல். ஹெபடைடிஸ் B நோயால் பாதிக்கப்பட்ட நபர்களிடத்தில், மேற்கூறிய அறிகுறிகளைக் காண இயலாத போது இதனைக் கண்டறிய மருத்துவர்கள் நிறைய சோதனைகளை செய்கிறார்கள்.


ஹெபடைடிஸ் B வைரஸ் தொற்றைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஹெபடைடிஸ் B தொடக்கத்தில், lgM-ஐ பரிசோதனையும், அதுவே நீண்ட காலம் நீடித்தால் IgG-ஐ சோதனையையும் செய்கின்றனர். பாதிக்கப்பட்ட நபரின் கல்லீரல் குறைபாடுடையதாக இருந்தால், liver biopsy பரிசோதனையின் மூலம் கல்லீரல் நிலை சரிபார்க்கப்படுகிறது. உடலில் ஹெபடைடிஸ் B வைரஸின் தாக்கத்தைக் கண்டறிய HBsAg பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. Liver function test, ஹெபடைடிஸ் B தொற்று கல்லீரலில் ஏற்படுத்தியுள்ள விளைவைக் கண்டறிய இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. கல்லீரலின் நிலையைச் கண்டறிய வயிற்றில் ultra sound scan செய்யப்படுகிறது.

Input & image courtesy:Logintohealth



Next Story
கதிர் தொகுப்பு
Trending News