Kathir News
Begin typing your search above and press return to search.

ஏகாம்பரநாதர் கோவில் வெள்ளி பல்லாக்கில் திருட்டு - அலட்சியம் காட்டும் அறநிலையத்துறை

ஏகம்பர நாதர் கோவிலில் வெள்ளி பல்லாக்கில் சுமார் மூன்று கிலோ தங்கம் மாயமாகி இருப்பது அதிர்ச்சி உள்ளாக்கி உள்ளது.

ஏகாம்பரநாதர் கோவில் வெள்ளி பல்லாக்கில் திருட்டு - அலட்சியம் காட்டும் அறநிலையத்துறை
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Sept 2022 8:03 AM IST

ஏகம்பரநாதர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். இங்கு உள்ள சுவாமி சிலைக்கு ஆபரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பக்தர்கள் தரப்பில் இருந்து கோவிலில் இருக்கும் ஆபரணங்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் 2020 நவம்பர் மாதம் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள்.


ஆய்வின் போது தான் கோவிலில் இருந்த வெள்ளிப் பல்லாக்கு ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் கோவிலின் வெள்ளி பல்லாக்கு சுமார் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் பொழுது கோவிலுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 200 ஆண்டு முந்திய பல்லாக்கு இது என்பது தெரிய வருகிறது. 11 கிலோ எடை வெள்ளி தகடு கொண்டு செய்யப்பட்ட இந்த பல்லாக்கு தற்போது 8.800 கிலோ வெள்ளி தகடு தான் உள்ளது என்பது ஆய்வில் தெரிய வந்தது. இது குறித்து நிர்வாகிகள் சார்பில் கேள்விகள் எடுக்கப்பட்டன. மாயமான மூன்று கிலோ வெள்ளி தகடு குறித்து உயர் அதிகாரிகள் கேள்வியை எழுப்பி உள்ளார்கள். இந்த நடவடிக்கை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


இந்நிலையில் தினேஷ் என்பவர் RTI தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெள்ளிப் பல்லாக்கில் திருட்டு போன வெள்ளி குறித்து அலுவலர் மற்றும் செயலாளர் நகை சரிபார்ப்பு அலுவலர் போலீஸ் புகார் அளித்துள்ளார்களா? என கேள்வி எழுப்பு இருந்தார். அதற்கு கோவில் தரப்பில், வெள்ளிப் பல்லாக்கு தேய்மானம் காரணமாக இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று நகை சரிபார்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். தகடுகள் எதுவும் திருட்டு போகவில்லை என்றும் அசால்ட் ஆக பதிலை கூறியிருக்கிறார்கள். வெள்ளி பல்லாக்கில் பல இடங்களில் வெள்ளி தகட்டை தேய்த்து எடுத்தார் போன்று புகைப்படம் வெளியாகி உள்ளது. உண்மையில் தேய்மானம் ஏற்பட்டு இருந்தால் இவ்வளவு தெளிவாக பெயர்த்து எடுத்தது போன்று புகைப்படம் இருக்காது. எனவே பக்தர்கள் சார்பில் இந்த ஒரு செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News