Kathir News
Begin typing your search above and press return to search.

திருக்குறள் பிரெய்லி புத்தகமாக வெளியீடு - மதுரை ஐகோர்ட்டு பாராட்டு!

திருக்குறளில் பிரெய்லி புத்தகமாக வெளியிட்டதற்கு அரசிற்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

திருக்குறள் பிரெய்லி புத்தகமாக வெளியீடு - மதுரை ஐகோர்ட்டு பாராட்டு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Oct 2022 1:53 AM GMT

மதுரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் படிப்பதற்கு வசதியாக தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் திருக்குறள் பிரெய்லி புத்தகங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர். அப்பொழுது அரசு வக்கீல் திலக குமார் ஆஜராகி செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தின் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட 45 சங்க கால இலக்கிய நூல்கள் பிரெய்லி முறையில் அச்சிடப்பட்டு இலவசமாக வழங்கப்படுகின்றன.


பிரெய்லி முறையில் திருக்குறள் புத்தகத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கம் பணி 75 சதவீதம் முடிந்துவிட்டது. பணி முடிந்ததும் இலவசமாக வழங்கப்படும் என்று கூறுகிறார். திருக்குறள் புத்தகத்தை பிரெய்லி முறையில் வெளியிடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் இந்த வழக்கை மேற்கொண்டு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை. அதே நேரம் பிரெய்லி முறையிலான திருக்குறளும் சங்க கால இலக்கியங்களும் தரமாக கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அப்பொழுதுதான் பார்வை திறன் அற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த மண்ணின் பெருமைகளையும் கலாச்சாரத்தையும் அனுபவிக்க முடியும் மனுதாரர் செம்மொழித் தமிழாய்வு மையத்தை அணுகி பரணி திருக்குறள் புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம். சங்கத்தமிழ் இலக்கியங்களை பிரெய்லி புத்தகமாக அறிவையும், இளமையும் பெற நடவடிக்கை எடுத்து தமிழக மற்றும் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் பணியை இந்த கோர்ட் பாராட்டுகிறது என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியிருந்தார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News