நீதிமன்ற உத்தரவிற்குபிறகு ரூ.2,000 கோடி மதிப்புள்ள கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு: பெருமை பேசும் தி.மு.க!
மே 2021 இல் இருந்து தற்போது வரை நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே, ரூ.2,000 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன.
By : Bharathi Latha
தற்போது ஒப்பிலியப்பன் கோயில் அருள்மிகு வேங்கடாஜலபதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சன்னாபுரம் வருவாய் கிராமத்தில் 3 ஏக்கர் 47 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் தான் தற்பொழுது அந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . தஞ்சாவூர் வருவாய் நீதிமன்றத்தின் ஆணைப்படி, இந்த நிலம் திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன், வருவாய் நீதிமன்றத் தனி வருவாய் ஆய்வாளர் எல். ரமேஷ், வருவாய் ஆய்வாளர் பிரபு, நில அளவையர் சசிகலா, சன்னாபுரம் கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன், திருக்கோயில் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் தொடர்புடைய நிலத்தின் குத்தகை செலுத்தாத குத்தகைதாரரிடமிருந்து மீட்கப்பட்டு, கோயில் செயல் அலுவலர் இடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்களை உயர் நதிமன்ற உத்தரவின் பேரில் தான் தற்பொழுதுமீட்கப்படும் நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகின்றதாம். மேலும் கடந்த மே மாதம் 2021ல் இருந்து தற்போது வரை அனைத்தும் மீட்கப்பட்ட நிலங்களின் சொத்து மதிப்பு ரூபாய் 2000 கோடி ஆக்கிரமிப்பு நிலங்களை அனைத்தும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் தற்போது தமிழக அரசு மீட்டு வருகிறது. ஆனால் அவற்றைத் தங்களுடைய ஆட்சியில் தான் அதிகமாக கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் வைக்கப்பட்டதாக தி.மு.க தற்பெருமை பேசி வருகிறது. "மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சொந்தமான 530 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளோம். இந்த நிலங்கள் பல தசாப்தங்களாக மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. நிலங்களை மீட்ட பிறகு, நாங்கள் அவற்றைக் கட்டுப்படுத்தி, வேலி அமைத்து, HR &CE இன் பெயர் பலகையை பலகையை நிறுவுதல் போன்ற செயல்களை செய்து வருவதாக" இந்து சமய துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆக்கிரமிப்புகளின் சொத்துக்களை அகற்றுவதோடு, பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துக்களை ஆக்கிரமித்துள்ள குத்தகைதாரர்களிடமிருந்து வாடகை வசூலிக்கும் பாரிய இயக்கத்தையும் HR & CE துறை தொடங்கியுள்ளது. 2,390 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த சமநிலை துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
Input & Image courtesy: Dinamani News