Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் ஆர்டர்!

கோவில் சொத்துக்களின் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று HR&CE கோர்ட் ஆர்டர் பிறப்பித்துள்ளது.

இந்து கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் ஆர்டர்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Aug 2022 2:06 AM GMT

தண்டையார்பேட்டையில் உள்ள கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை இரண்டு மாத கால அவகாசத்திற்குள் அளவீடு செய்து அதில் ஆக்கிரமிப்பு ஏதாவது இருந்தால் அதனை சட்டபூர்வமாக அகற்ற வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சென்னை மண்ணடியில் உள்ள பவளக்கால் தெருவில் வேணுகோபால கிருஷ்ணசாமி என்று கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான சொத்து தான் தண்டையார்பேட்டை வேலாயுத பாண்டி தெருவில் உள்ளது.


மேலும் இந்த சொத்துக்கள் மூலம் கோவிலுக்கு எந்தவித வருமானமும் கிடைக்கவில்லை. தெளிவான ஆவணம் இந்த சொத்து கோவிலுக்கு சொந்தமானது என்று இருந்தாலும் பல்வேறு ஆக்கிரமிப்பு காரணமாக கோவில் வருமானம் தற்போது தடைபட்டுள்ளது. இதனை தமிழக இந்து சமய அறநிலைத்துறை கண்டுகொள்ளாமல் விட்டு இருக்கிறது. எனவே மாவட்ட கலெக்டர் இந்துசமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தண்டையார்பேட்டை வேலாயுதம் தெருவில் உள்ள சொத்துக்களை உடனடியாக அடையாளம் கண்டு அவற்றை மீட்டு எடுக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.


இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி முனீஸ்வரன் ஆகியோர் தண்டையார்பேட்டையில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய தாசில்தாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால், சட்டப்படி அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

Input & Image courtesy: Dailythanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News