Kathir News
Begin typing your search above and press return to search.

மண்டைக்காடு கோவில் அருகே கிறிஸ்துவ மாநாடு - அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்!

மண்டைக்காட்டு கோவில் அருகே கிறிஸ்தவ மாநாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மண்டைக்காடு கோவில் அருகே கிறிஸ்துவ மாநாடு - அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Oct 2022 5:07 AM GMT

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அருகே கிறிஸ்தவ மாநாடு நடத்த அனுமதியை தமிழக அரசு உத்தரவு மறுத்துள்ளது. அதற்கு பதிலாக மாற்று இடத்தில் நடத்த அனுமதி அழிக்கலாம் என்று கலெக்டர் பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது பற்றி சர்ச் போதகர் டைட்டஸ் அவர்கள் கூறுகையில் மண்டை காட்டுவதில் உள்ள சர்ச்சில் மாநாடு நடத்த அனுமதி போலீசார் மறுத்துள்ளார்கள். அது சட்டம் விரோதமானது. அனுமதி கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.


அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் கிறிஸ்துவ மாநாடு நடைபெறுவதற்கான அனுமதியை மறுத்து இருக்கிறார்கள். மண்டை காட்டுவில் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கிடையே மத மோதல் காரணமாக மதிப்புமிக்க பல உயிர்கள் பலியானது. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. எதிர்காலத்தில் மத மோதல்களை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்க அன்றைய நீதிபதி தலைமையிலான கமிஷனை மாநில அரசு அமைத்தது. அவர் மண்டைக்காட்டு பகுதியில் மதக்கர கலவரம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளை விசாரித்து அரசுக்கு பரிந்துரைத்தார்.


ஏற்கனவே பிற மதத்தினர் வழிபாட்டுத் தலங்களில் உள்ள இடங்களில் வேறு மதத்தினர் வழிபாடு தளங்களை அமைக்க எந்த ஒரு நபர் அல்லது நிறுவனத்திற்கு அனுமதி கிடையாது. மைக் பயன்படுத்துவது ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு பிற மதத்தின் மத நடைமுறைகளில் தலையிடுகின்றது என்று அந்த கமிஷன் கூறி இருக்கிறது..அதை மையமாக வைத்து தற்போது மண்டைக்காட்டு பகவதி அம்மன் கோவிலில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாநாடு நடத்த அனுமதிக்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த அனுமதி உத்தரவை மறுத்துள்ளது.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News