Kathir News
Begin typing your search above and press return to search.

புத்த மடாலயத்தில் தங்கி இருந்த சீனப்பெண் கைது - இமாச்சலப் பிரதேச போலீசார் அதிரடி

நேபாளத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி புத்த மடாலயத்தில் தங்கி இருந்த சீனப் பெண் கைது இமாச்சல பிரதேச போலீசார் அதிரடி.

புத்த மடாலயத்தில் தங்கி இருந்த சீனப்பெண் கைது - இமாச்சலப் பிரதேச போலீசார் அதிரடி

KarthigaBy : Karthiga

  |  27 Oct 2022 3:15 PM GMT

இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தின் ஜோகிந்தர் நகரில் உள்ள புத்த மடாலயம் ஒன்றில் நேபாளத்தைச் சேர்ந்தவர் என கூறிக்கொண்டு பெண் ஒருவர் தங்கி இருந்தார்.அவர் மீது சந்தேகம் வலுத்ததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே மாண்டி போலீசார் மடாலயத்துக்கு சென்று அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டும் போலி எனத் தெரிய வந்தது. மேலும் நேபாளத்தைச் சேர்ந்தவர் எனக் கூறியவர் சமர்ப்பித்த ஆவணங்களும் போலி எனத் தெரிய வந்தது .தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சீனாவை சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்து 6.4 லட்சம் மற்றும் 1.10 லட்சம் நேபாள ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.


இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண் எதற்காக இங்கு வந்தார் ?சீனாவுக்காக உளவு பார்த்தாரா ?என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.புத்த மடாலயத்தில் சீனப் பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் இமாச்சலப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News