பத்தர்கள் மீது தாக்குதல்.. ரவுடிசத்தில் ஈடுபடுதா அறநிலையத்துறை.. இந்து முன்னணி காட்டம்!
திருச்செந்தூரில் வேல் குத்தி வந்த பத்தர்கள் மீது தாக்குதல் குறித்து இந்துமுன்னணி எச்சரிக்கை
By : Bharathi Latha
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் கூறும் பொழுது, "அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலுக்கு விரதமிருந்து வேல் குத்தி வந்த பக்தரை திருக்கோவிலில் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு அலுவலர்கள் நெஞ்சை பிடித்து தள்ளிவிட்ட வீடியோ பதிவுகள் நேற்று சமூக வலைதளங்களில் காண முடிகிறது. இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்குள் எத்தகைய ரவுடியிசத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே கண்கண்ட உதாரணமாகும்.
பக்தர்களுக்கு தான் கோவிலே தவிர சம்பளத்திற்கு பணியாற்றுபவர்களுக்கு அல்ல. திருச்செந்தூர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்குடம் எடுத்து வந்த பக்தர்களை உள்ளே அனுமதிக்காததால் பக்தர்கள் வேதனையோடு பிரகாரத்தில் பாலை கொட்டிச் சென்ற சம்பவம் முடிந்து ஒரு மாதத்திற்குள்ளாகவேவேல் குத்தி வந்த பக்தர்களை ரவுடிகள் போல் தாக்கி தள்ளுவது வேதனைக்குரிய செயலாகும். இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அராஜக செயலை இந்துமுன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது இந்து முன்னணி.
திருச்செந்தூர் திருக்கோவிலில் அப்பாவி பக்தர்கள் கோவில் நிர்வாகத்தால் தொடர்ந்து தாக்கப்படும் ரவுடியிசத்தை சம்பவத்தை இந்துமுன்னணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. பக்தர்கள் தாக்கப்படும் செயல் தொடர்ந்தால் இந்துமுன்னணி சார்பில் திருக்கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என்று இந்து முன்னணி எச்சரிப்பதாக அந்த அறிக்கை அமைந்து இருக்கிறது.
Input & Image courtesy: Twitter