Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் சதுர்த்தி நிபந்தனைகள் அரசாணையை எதிர்த்து கால வரையற்ற உண்ணாவிரதம் : இந்து முன்னணி அதிரடி

விநாயகர் சதுர்த்தி நிபந்தனைகள் அரசாணையை எதிர்த்து கால வரையற்ற உண்ணாவிரதம் : இந்து முன்னணி அதிரடி

விநாயகர் சதுர்த்தி நிபந்தனைகள் அரசாணையை எதிர்த்து கால வரையற்ற உண்ணாவிரதம் : இந்து முன்னணி அதிரடி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Sep 2018 6:26 AM GMT

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடவும், அவற்றை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை விசர்ஜனம் செய்வதற்கும் தமிழக அரசு புதிய நிபந்தனைகளை விதித்து அரசாணை பிறப்பித்தது. குறிப்பாக பல்வேறு துறையினரிடம் முன் அனுமதி மற்றும் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விநாயகர் சதுர்த்திக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வசந்தகுமார், சுடலையாண்டி உள்ளிட்டோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.



இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



இதனை தொடர்ந்து அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்து முன்னணி கால வரையற்ற உண்ணாவிரதத்தில் குதித்துள்ளது. இந்து மத பண்டிகைகளுக்கு, குறிப்பாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு ஒவ்வொரு வருடமும் பல எதிர்ப்புகள் கிளம்பும். மற்ற மத பண்டிகைகள் கொண்டாடுவதற்கு அனைத்து சுதந்திரமும் உள்ள நிலையில், பெரும்பாண்மை சமூகமான இந்துக்களின் பண்டிகைகளை கொண்டாடுவதற்கு மட்டும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்து வகையான எதிர்ப்புகளையும் கையில் எடுப்பது வழக்கமாகி விட்டது.



தற்போது தமிழக அரசாங்கமே அதிகாரபூர்வமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு பல நிபன்தனைகளை விதித்து மத சுதந்திரத்தை பறிக்க நினைப்பது இந்துக்களிடையே எதிர்ப்பை கிளப்பியுள்ளது.



தொடர்ந்து, தமிழக அரசின் விநாயகர் சதுர்த்தி அரசு ஆணை நிபந்தனைகளை நீக்கக் கோரி, இந்து முன்னணி மாநில தலைவர்


காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி துவங்கியுள்ள காலவரையற்ற உ ண்ணாவிரத போராட்டத்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கும் என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவத்சலம் அறிவிதுள்ளார்.

இன்று நடந்து கொண்டிருக்கும் உண்ணாவிரத கூட்டத்தில், தனது தள்ளாத வயதிலும், மன உறுதியுடன் இந்து முன்னணி தலைவர் திரு இராமகோபால் ஜி உண்ணாவிரதத்லில் கலந்து கொண்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News