Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடக கல்லூரி மாணவிக்கு அல்கொய்தாவுடன் தொடர்பு? என்.ஐ.ஏ. விசாரணை செய்ய கோரிக்கை!

கர்நாடக கல்லூரி மாணவிக்கு அல்கொய்தாவுடன் தொடர்பு? என்.ஐ.ஏ. விசாரணை செய்ய கோரிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  7 April 2022 12:27 PM GMT

கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனை மீறி கல்லூரிக்கு சென்ற முஸ்கான் என்ற மாணவி அல்லாஹூ என்ற கோஷங்களை எழுப்பி கல்லூரி வாயிலில் நடந்து சென்றார். அவரது கோஷத்துக்கு பின்னர் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பயங்கரவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று (ஏப்ரல் 6) பயங்கரவாத இயக்கமான அல்கொய்தா இயக்க தலைவர் ஒருவர் முஸ்கான் மாணவியை பாராட்டி பேசியிருந்தார். இவரது பாராட்டு பேச்சு இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் பாராட்டியிருப்பதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்து முன்னணி ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளதாவது: இந்து ஜனநாயகத்தில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்றும் அல்லாஹூ அக்பர் கோஷம் போட்ட முஸ்கான் என்ற பெண்ணைப் பாராட்டி பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா தலைவர் அம்மான் அல் ஜவாஹிரி வீடியோ வெளியிட்டுள்ளார். இது பற்றி என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News