Kathir News
Begin typing your search above and press return to search.

கிறிஸ்துவ மதமாற்றத்தை எதிர்த்து போராடும் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் : நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்த இந்து முன்னணி

கிறிஸ்துவ மதமாற்றத்தை எதிர்த்து போராடும் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் : நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்த இந்து முன்னணி

கிறிஸ்துவ மதமாற்றத்தை எதிர்த்து போராடும் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் : நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்த இந்து முன்னணி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Feb 2019 7:08 PM GMT


மதுரை புறநகர் மாவட்டம் சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை திட்டமிட்ட ரீதியில் பல்வேறு வகையில் மதமாற்ற கிறிஸ்தவர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். ஆனால் அதை போராடி வருகின்றனர் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள். இதனை அடுத்து, அந்த மக்களை நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்துள்ளார் இந்து முன்னணி மாநில தலைவர் திரு. காடேஸ்வர ராவ். இது குறித்து, இந்து முன்னணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இந்து முன்னணி மதுரை புறநகர் மாவட்டம் சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.


இவர்களை திட்டமிட்ட ரீதியில் பல்வேறு வகையில் மதமாற்ற கிறிஸ்தவ மிஷினரிகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.


ஆனால் பாரம்பரிய பழக்கவழக்கங்களை விடக்கூடாது என்ற உயரிய எண்ணம் காரணமாக , மதமாற்ற கும்பலை எதிர்த்து அவர்கள் தீரத்தோடு போராடி வருகின்றனர்.


இந்நிலையில் இந்துமுன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம், அவர்களை நேரில் சென்று சந்தித்து இந்துமுன்னணி இயக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் என்று உறுதியளித்தார். மேலும் அங்கு இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை கூறினார்.


இந்து முன்னணி மாநில தலைவருக்கு ஹிந்து சொந்தங்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


மேலும் அங்கு மதமாற்ற எதிர்ப்பு பொதுக்கூட்டமும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி தலைமையில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.


மாநில செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், பழனிவேல்சாமி ஆகியோர் சிறப்புறையாற்றினர்.வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இந்த கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட்டது", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News