Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டு கோவில்களில் திருடப்பட்ட 20 கலசங்கள் - போலீஸ் விசாரணை!

இரண்டு கோவில்களில் இருந்து சுமார் 20 கலசங்கள் திருடப்பட்டு உள்ளது.

இரண்டு கோவில்களில் திருடப்பட்ட 20 கலசங்கள் - போலீஸ் விசாரணை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Sept 2022 2:35 PM IST

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெலசூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது தான் யோகாம்பிகை சமேத ஆவுடையார் கோவில் ஆகும். இந்தக் கோவிலில் கோபுரத்தில் இருந்து இரண்டு கலசங்கள் காணவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி இது பற்றி வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கு முன்பு இந்த கோவிலில் இது மாதிரியான திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது இல்லை என்றும் பூசாரி தரப்பில் கூறப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து போலீசார் தற்போது விசாரித்து வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கலசங்கள் திருட்டுப் போன கோவிலையும், நேரில் பார்வையிட்டு தடயங்களை சேகரித்ததோடு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நள்ளிரவில் புகுந்த ஊருக்குள் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் இரண்டு கோவில்களின் கதவு பூட்டு பூட்டுகளை உடைக்காமல் கோவில் சுவர் வழியாக கோபுரங்கள் மீது ஏறி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 20 கலசங்களை திருடி சென்று இருப்பதும் தெரியவந்தது.



மேலும் இந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர அவசரணையை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் இந்த கலசங்களை திருடிய நபர்களை அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்தப் பகுதியில் தெருவிளக்கு இல்லாமல் இருந்திருப்பதும் மர்ம நபர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதாம்.

Input & Image courtesy: Thanthi News



Next Story
கதிர் தொகுப்பு
Trending News