கோவிலுக்குள் மது போதையில் அரிவாளுடன் வந்த வாலிபர்... பக்தர்களை பாதுகாக்க தவறிய அறநிலையத் துறை?
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் மது போதையில் அரிவாளுடன் வந்த வாலிபரால் பரபரப்பு.
By : Bharathi Latha
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று மதியம் இளைஞர் ஒருவர் கையில் அருவாளுடன் திருமஞ்சன கோபுர நுழைவாயில் வாயிலாக கோவிலுக்குள் நுழைந்து இருக்கிறார். இந்த ஒரு சம்பவம் அந்த ஒரு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அந்த நபர் கோவில் பிரகாரத்தில் கையில் அருவாளுடன் அரங்கத்தில் சென்று காம்பவுண்ட் சுவர் ஏறி தப்பி சென்று இருக்கிறார் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. பின்னர் அங்கிருந்து இறங்கிய அந்த வாலிபர் இணை ஆணையர் அலுவலகத்திற்குள் சென்று, அங்கிருந்த கண்ணாடி கதவை உடைத்து பல்வேறு அட்டகாசம் பணிகளை செய்து இருக்கிறார்.
பின்னர் அவர் அட்டகாசத்தை பார்த்து அங்கிருந்து பக்தர்கள் அவரை போலீஸ் அறைக்குள் சுற்றி வளைத்து கையும் காலுவமாக இன்ஸ்பெக்டர் சுப்ரமணியத்திடம் ஒப்படைத்து இருந்தார்கள். அப்போது அந்த வாலிபரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். ஏனெனில் அவர் அங்கு ரகளை ஈடுபட்ட பொழுது கையில் இருந்த அரிவாள் அவருக்கே தீங்கு விளைவுக்கும் வகையில் கையை பதம் பார்த்ததாக குறிப்பிட்டு இருக்கிறது.
குறிப்பாக அவரை விசாரித்த போது அவருக்கு போதை தலைக்கு எறியதாகவும் அதனால் தான் அவர் தன்னுடைய கையில் அருவாளை எடுத்து, அந்த பகுதிகளில் தன்னுடைய ரகலையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. குறிப்பாக அந்த வாலிபர் இந்த பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களிடம் அருவாளை காட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் பாதுகாப்பை உறுதி செய்ய தவறி இருக்கிறது.
Input & Image courtesy: puthiyathalaimurai-