இந்து கோவிலில் மாட்டின் எலும்பு துண்டுகள்: மர்ம நபர்களின் அட்டூழியம்... பரபரப்பில் பக்தர்கள்?
புகழ்பெற்ற காளி கோவிலில் தற்பொழுது கிடந்த மாட்டின் எலும்பு துண்டுகள் காரணமாக பரபரப்பு.
By : Bharathi Latha
தற்போது அசாம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காளி கோவிலில் மர்ம நபர்கள் செய்த அட்டூழியம் காரணமாக அங்கு மாட்டு இறைச்சியின் எலும்பு கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அசாமில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கிவரும் காளியம்மன் கோவிலில் தற்பொழுது மர்ம நபர்கள் செயல் காரணமாக அங்குள்ள பக்தர்கள் பரபரப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக மாட்டி இறைச்சியின் எலும்பு துண்டுகளை கோவிலில் வீசி சென்றதன் காரணமாக அங்கு இந்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஹைலாகண்டி என்ற மாவட்டத்தில் புகழ்பெற்ற காளி கோயில் அமைந்து இருக்கிறது.
இந்த கோவிலில் தான் தற்பொழுது எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது. அந்த எலும்பு துண்டுகளை காவல்துறை கைப்பற்றிய பிறகுதான் அது மாட்டு இறைச்சியின் எலும்பு துண்டு என்பது தெரியவந்திருக்கிறது. இதனை பார்த்த பக்தர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விரைந்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார்கள். அதன் பிறகு காவல்துறையினர் சம்பவம் நடந்த கோவிலில் வந்து யார் இதை வீசி சென்று இருப்பார்? சி.சி.டி.வி கேமரா காட்சிகள் ஏதேனும் பதிவாகி இருக்கிறதா?என்பது போன்ற விசாரணைகள் தற்பொழுது மேற்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் விசாரணை மேற்கொள்ளும் வீடியோ தான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதை பெரும்பாலான இந்துக்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்து கோவில்களில் நடக்கும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது போன்றான தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Input & Image courtesy: Mediyaan News