விழுப்புரம்: பழமையான கோவிலின் கோபுர கலசம் திருட்டு!
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் உள்ள கிராமத்தில் இருந்த பழமையான கோவிலின் கோபுர கலசம் திருட்டு.
By : Bharathi Latha
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ராய புதுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான பொன்னியம்மன் கோவில் உள்ளது. இது மிகவும் பழமையான கோயில் என்பதால் பார்ப்பதற்கு சற்று தற்போது உள்ள கோவில்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கும் இருந்தாலும், இங்கு உள்ள கோவில் கலசம் மிகவும் பிரசித்தி பெற்றது என்று அங்குள்ள ஊர் மக்கள் கூறுகிறார்கள். இந்தநிலையில நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலின் கோபுரத்தில் இருந்த செம்பு கலசத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். மேலும் கோவில் கலசம் திருட்டு ஏற்பட்டவுடன் அங்குள்ள பக்தர்கள் இது பற்றி மிகவும் அச்சம் அடைந்தார்கள். மேலும் இது ஒரு ஆபத்தான அறிகுறியாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.
இன்று காலை கோபுர கலசம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து அங்குள்ள ராயபுதுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி சங்கர் கோட்டக்குப்பம் போலீசில் புகார் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அதன்பேரில் போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்குப்பதிவு செய்து கோபுர கலசத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவில் கோபுர கலசம் திருடு போன சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்த கோயில், பராமரிப்பு செலவு செய்ய முடியாத காரணத்தினால், பக்தர்கள் வழிபாட்டிற்கு ஏற்றதாக இல்லாமல் அவலநிலையில் காணப்படுகிறது.மேலும் இப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் கோரிக்கை, "இத்திருக்கோயிலில் உள்ள கட்டுமானங்கள் மற்றும் சுதை சிற்பங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். வடக்கு புறம் மதில் சுவர் இடிந்து பாதுகாப்பில்லாமல் உள்ளது. மதில் சுவர்களில் ஆங்காங்கே இடிபாடுகளுடன் காணப்படுகிறது. இவற்றைப் புதுப்பிக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
Input & Image courtesy:DailyThanthi News