இந்துவாக வேடமிட்டு ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழித்து திருமணம் செய்த முஸ்லீம் நபர் - மதமாற்றம் செய்தும் அடங்காத வெறி!
இந்துவாக வேடமிட்டு ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழித்து திருமணம் செய்த முஸ்லீம் நபர் - மதமாற்றம் செய்தும் அடங்காத வெறி!
By : Kathir Webdesk
முஸ்லிம் மதத்துக்கு மாற்றி பாலியல் கொடுமைகள் செய்த பின்னர் முத்தலாக் கூறி விவா கரத்து செய்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஞ்சியை சேர்ந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அப்பெண், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒரு தொண்டு நிறுவனத்தில் 2013-ல் ஆலோசக ராக சேர்ந்தேன். அப்போது, சோனு என்பவர் எனக்கு அறிமுகமானார். ஒரு நாள் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது என்னை டாக்டரிடம் சோனு அழைத்துச் சென்றார். பின்னர் ஒரு மாத் திரையை கொடுத்தார். அதை சாப்பிட்ட நான் நினைவு இழந்தேன். இரண்டு நாள் கழித்து பார்த்தபோது ராஞ்சியில் சோனுவின் வீட்டில் ஆடை இல்லாமல் இருந்தேன். நான் நினைவிழந்த நிலையில் என்னை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து சோனு என்னை மிரட்டி தான் சொல்லும்படி நடக்கச் செய்தார்.
சோனு எப்போதும் நெற்றியில் திலகம் அணிந்திருப்பார். அவரை இந்து என்று நம்பினேன். ஆனால், ஒருநாள் அவர் என்னை ராஞ்சியில் டொராண்டா பகுதியி்ல் உள்ள காஜியிடம் அழைத்துச் சென்று முஸ்லிமாக என்னை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். சோனுவின் உண்மையான பெயர் முகமது அப்துல் கைஷ் என்று தெரிந்துகொண்டேன். பின்னர், என்னை 2016-ல் டெல்லிக்கு அழைத்துச் சென்று கொடுமைப் படுத்தினார். அங்கு பலர் என்னை கூட்டு பலாத்காரம் செய்தனர். கடந்த மே மாதம் டெல்லியில் அப்துல் கைஷ் என்னை தனியாக விட்டுச் சென்றுவிட்டார்.
பின்னர், நான் ராஞ்சிக்கு வந்து அப்துல் கைஷை கண்டுபிடித்து நியாயம் கேட்டபோது கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி என்னை முத்தலாக் கூறி சட்டவிரோதமாக விவாகரத்து செய்துவிட்டார். அப்துல் கைஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.