Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துக்கள், “ஹலால்” உணவு சாப்பிடலாமா?

இந்துக்கள், “ஹலால்” உணவு சாப்பிடலாமா?

இந்துக்கள், “ஹலால்” உணவு சாப்பிடலாமா?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Sep 2019 12:29 PM GMT

சமீப காலமாக பெரும்பாலான அசைவ உணவகங்களிலும், இறைச்சி கடைகளிலும் “100% Halal” என்று அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டு இருக்கும்.
“ஹலால்” என்றால் என்ன? “ஹலால்” செய்யப்பட்ட உணவையோ அல்லது “ஹலால்” இறச்சிகளையோ இந்துக்கள் பயன்படுத்தலாமா?
“ஹலால்” இந்து மதம் ஏற்றுக்கொள்ளாத ஒன்று.
இந்துக்களின் புலால் உண்ணும் முறைக்கு “ஜட்கா” என்று பெயர்.
முதலில் “ஹலால்” என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
விலங்கை அதாவது ஆடு, மாடு, கோழி போன்றவற்றை, அதன் முன்னங்கழுத்தில் உள்ள ரத்த நாளங்களை சிறிதாக அறுத்து, அதன் ரத்தம் வடிய வடிய கொலை செய்வது. அதாவது கழுத்தை ஒரே வெட்டாக வெட்டி அதற்கு வலி தெரியாமல் கொல்ல கூடாது.
“ஹலால்” முறையில் கொல்லப்படும் விலங்கு உடனே சாகாது. அது மரண அவஸ்தையை முழுமையாக அனுபவித்து, துடி துடித்து சாகும். அதற்கு வலி தெரிய வேண்டும் என்பதற்காக தண்டுவடத்தை அறுபடாமல் பார்த்துக்கொள்வார்கள்.
அவ்வாறு அறுக்கப்படும்போது, முஸ்லிம் ஒருவர் அருகில் அமர்ந்து குரான் ஓதுவார். இதைத்தான் “ஓதி அறுப்பது” என்பார்கள்.
இந்து மதம் அகிம்சையை போதிக்கும் மதம். அதேநேரம், அசைவத்தையும் இந்து மதம் மறுக்க வில்லை.
ஆனால் ஹிந்து மதத்தில் வலி ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள படாத ஒன்று. கோயில்களில் பலி கொடுக்கும் போதுகூட, ஒரே வெட்டில் விலங்கை கொன்று விட வேண்டும் என்பதே நடைமுறை. அதாவது அந்த விலங்கிற்கு, தான் வெட்டப்பட்ட வலி தெரிவதற்கு முன்பே மரணம் எட்டி விடும். ஓங்கி வெட்டும்போது முதலில் தண்டுவடம் வெட்டுப்படும்படி பின்னங்கழுத்தில் வெட்டுவதால் உடனடி, மற்றும் வலி இல்லா மரணம். இந்த முறைக்கு “ஜட்கா” என்று பெயர்.
சீக்கிய மத குருவான குரு கோவிந்த் சிங், சீக்கியர்களுக்கு இந்து முறையான “ஜட்கா” மாமிசத்தை மட்டுமே உண்ண வலியுறுத்தியுள்ளார். இதனால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லா கடைகளிலும் “ஜட்கா” மாமிசம் என்ற பெயர் விளம்பர பலகையில் இருப்பதை பார்க்கலாம்.
முஸ்லிம்கள், ஹலால் செய்யப்பட்டாத உணவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்துக்கள் ஹலால் செய்யப்பட்டது என்று தெரிந்தும் சாப்பிடுகிறார்கள். இது இந்து மதத்திற்கு எதிரானது. குரான் ஓதி அறுத்த இறச்சியானது அவர்களின் தெய்வமான அல்லாவுக்கு படைக்கப்பட்டது. அதை இந்துக்கள் சாப்பிடுவது எப்படி சரியாக இருக்கும்.
“ஜட்கா” மாமிசம் இல்லை என்று தெரிந்தால் இந்துக்கள் அந்த இறச்சியையோ அல்லது உணவையோ வாங்காமல் தவிர்ப்பதே இந்து மத நம்பிக்கைக்கு உகந்தது. நிச்சயமாக “ஹலால்“ இறச்சி அல்லது உணவை இந்துக்கள் தவிர்த்தே ஆக வேண்டும்.
இதுவே இந்து தர்மத்திற்கு இந்துக்கள் செய்யும் சேவையாகும்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News