இந்துக்களின் சொத்துகள், வழிபாட்டு தலங்கள் மீது 3,721 தாக்குதல்கள் : வங்கதேசத்தை சூறையாடும் இஸ்லாமிய கும்பல்!
Hindus protest against Bangladesh violence in 740 ISKCON temples
By : Muruganandham
வங்கதேசத்தில் கடந்த 9 ஆண்டுகளில் இந்துக்கள் மீது 3,721 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஊடகங்களில் வெளியான வன்முறை சம்பவங்கள் அடிப்படையில் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ள தனியார் அமைப்பு, கடந்த 9 ஆண்டில் இந்துக்கள், அவர்களின் சொத்துகள், வழிபாட்டு தலங்கள் மீது 3,721 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்து கோயில்கள், வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல், சிலை உடைப்பு என 1,678 சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 3 ஆண்டில் 18 இந்து குடும்பங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.
2014ல் மிக மோசமாக, இந்து விரோத கும்பல்களால் சிறுபான்மையினரின் 1201 வீடுகள் உடைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய துர்கா பூஜை வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டு, 70 பேர் காயமடைந்து உள்ளனர். 130 வீடுகள், கடைகள், கோயில்கள் நொறுக்கப்பட்டுள்ளன.
நாடு பிரிவினையின்போது 30 சதவீதமாக இருந்த இந்துக்கள் தற்போது 9% ஆக சரிந்து விட்டனர். இதே நிலை தொடர்ந்தால் இந்துக்கள் பாதுகாப்பின்றி அங்கிருந்து வெளியேறி வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டிக்கும் வகையில் வங்கதேசத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் 10 ஆயிரம் பேர் திரண்டனர். இது போல் லண்டனிலும் ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினர்.ஹிந்துக்களுக்கு சொந்தமான 70க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப் பட்டன.
இந்த வன்முறைக்கு காரணமான இக்பால் உசேன் என்பவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அதில் தொடர்புடைய மற்றொரு நபர் டாக்காவில் கைது செய்யப்பட்டார்.